Home » வெற்றிக் கொடி கட்டு : உக்ரைன் திட்டம் 1.0
உலகம்

வெற்றிக் கொடி கட்டு : உக்ரைன் திட்டம் 1.0

அதிபர் ஜெலன்ஸ்கி - அதிபர் புதின்

பலயனீட்சா. வட்ட வடிவில் கிடைமட்டமாக ஒருபுறம் வெட்டிய உக்ரைனிய பிரட் இது. உக்ரைனியர்களைப் போல நடிக்கும் ரஷ்ய வீரர்கள் அல்லது உளவாளிகளைக் கண்டுபிடிக்க, இந்த ஒரு வார்த்தையைத்தான் சொல்லச் சொல்வார்களாம். இதன் கடைசி அசை ரஷ்ய மொழியில் இல்லாததால், ரஷ்யர்களால் இதை ஒருபோதும் சரியாக உச்சரிக்க முடிந்ததில்லை. பலரும் இதை ஸ்ட்ராபெர்ரி என்று அர்த்தமுடைய போலோநீட்சா என்றே புரிந்து கொண்டு, அவ்வாறே சொல்லி மாட்டிக் கொள்வார்கள். கூடவே இதன் பாரம்பரியமும், உக்ரைனியர்கள் மட்டுமே அறிந்தது.

இன்று சொந்தமாக உக்ரைனிலேயே உருவாக்கியிருக்கும் தொலைதூர ஆயுதத்தையும், இந்தப் பெயர் கொண்டே அழைக்கிறார்கள். ஒருவிதத்தில் இதுவும் அந்த பிரட்டைப் போலவே தனித்துவமானது தான். ஏவுகணை மற்றும் ட்ரோன் என இரண்டின் அம்சங்களோடு, எழுநூறு கிமீ தூரம்வரை பறந்து சென்று தாக்கக்கூடிய ஆயுதம் இது. அமெரிக்கத் தொலைதூர ஏவுகணைகளின் தரத்தில், உக்ரைனிலேயே உற்பத்தியாகும் இவற்றின் விலை ஒரு மில்லியனுக்கும் குறைவே. இனி ரஷ்யாவிற்குள் ஏவுகணைகளை வீச, உக்ரைன் யாருடைய அனுமதியையும் பெற வேண்டியதில்லை. நேட்டோ நாடுகளின் ஆயுதங்களை ரஷ்யாவிற்குள் உபயோகிப்பதை மட்டுமே அவை தடை செய்ய முடியும். இது உக்ரைனின் சொந்தத் தயாரிப்பு, முடிவெடுக்க வேண்டியது அவர்கள் மட்டுமே. உக்ரைனின் சுதந்திர தினத்தன்று (24-ஆகஸ்ட்) உலகிற்கு இது அறிமுகப்படுத்தப்பட்டது.

இதைத் தொடர்ந்து உக்ரைனின் வெற்றி திட்டத்தையும் தயாரித்திருக்கிறார் அதிபர் ஜெலன்ஸ்கி. ராணுவம், பாதுகாப்பு உள்கட்டமைப்பு, பொருளாதாரம் மற்றும் அரசியல் ரீதியான போர் முடிவுகள் என்று நான்கு பகுதிகளைக் கொண்டது இது. அமெரிக்காவின் தற்போதைய மற்றும் வருங்கால அதிபர்கள் அனைவரிடமும் இதை எடுத்துரைத்து, அதன்பின் செயல்படுத்த உள்ளார்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!