உக்ரைன் போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைகளில் முதல் முக்கிய நிபந்தனையாக வைக்கப்படுவது உக்ரைனின் நிலப்பரப்பு. பதினோரு வருடங்களாகச் சிறிதும் பெரிதுமாக உக்ரைனில் ரஷ்யா ஆக்கிரமித்திருக்கும் நிலப்பரப்புகளை ரஷ்யாவிடமே ஒப்படைத்து, சர்வதேச அங்கீகாரம் கொடுக்க வேண்டுமென்பதே அது. இதைச் செய்வதில் உக்ரைனுக்குச் சிறிதளவும் விருப்பமில்லை. ‘இப்படித்தான் 2014இல் அமைதிக்காக கிரீமியாவை தாரைவார்த்துக் கொடுத்தோம், இம்முறையும் ஏமாறத் தயாராக இல்லை’ என்கிறது உக்ரைன்.
மூன்றரை வருடங்களாக நடக்கும் போரில் இதுவரை உக்ரைனின் இருபது சதவீத நிலப்பரப்பை ரஷ்யா ஆக்கிரமித்துள்ளது. பாகிஸ்தான் எப்படி இந்தியாவுக்கு வடமேற்கில் ஒரு கடற்குதிரையைப் போல அமைந்துள்ளதோ, ரஷ்யாவின் தென்மேற்கில் அமைந்துள்ள இதே போன்றதொரு உக்ரைனியப் பகுதி, தற்போது ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. ரஷ்யா கேட்பது இந்தப் பகுதியை மட்டுமல்ல என்பதே இதிலுள்ள திருப்பம்.
போர் நிறுத்தம் ஏற்பட நிலப் பரிமாற்றம் செய்ய வேண்டியிருக்கும் என்றாரே உலகின் சமாதான தூதரான அமெரிக்க அதிபர்? அவரும் இந்தப் பகுதியைப் பற்றித்தான் கூறியுள்ளார். இதைப் புரிந்துகொள்ள முதலில் ரஷ்யா எங்கெங்கு, எவ்வளவு கைப்பற்றியிருக்கிறது என்று பார்ப்பது அவசியம்.















Add Comment