13. மன்னன் எவ்வழி
ரஷ்ய மக்கள். புதின் எழுதிய உக்ரைன் யுத்தத் திரைக்கதைக்கு க்ளைமேக்ஸ் எழுதும் தகுதி படைத்தவர்கள் அவர்கள்தாம் என்று பார்த்தோம். ஒருமித்த குரலில் அவர்கள் தமது எதிர்ப்பைத் தெரிவித்து, போருக்கு எதிராக அல்லது புதினுக்கு எதிராகக் குரல் கொடுக்கத் தொடங்கினால் நூல் அல்லது வால் பிடித்து ரஷ்யாவின் புதின் எதிர்ப்பு அரசியல் வல்லுநர்கள் மீதிக் காரியத்தைக் கிரமமாகச் செய்து முடித்துவிடுவார்கள். ரஷ்யாவில் புதின் நீங்கலான பிற அனைத்து அரசியல்வாதிகளுக்கும் இன்றுள்ள பெரும் பிரச்னையே அதுதான். மக்கள் அவரை எவ்வளவு ஆதரிக்கிறார்கள்? அல்லது எவ்வளவு ஏற்கிறார்கள்?
Add Comment