39 சாமி சிதம்பரனார் (01.12.1900 – 17.01.1961)
தாம் வாழ்ந்த அறுபது வருடங்களில் நாற்பது வருடங்களை மொழி மற்றும் சமூகப் பணிகளுக்காகச் செலவிட்டவர். ஐரோப்பியச் சிந்தனையின் தாக்கமும், தொழிற்புரட்சியால் விளைந்த மாற்றங்களும் சமூகத்தில் பரவிய காலத்தில், தமிழிலக்கிய உலகின் மரபார்ந்த தன்மைக்குள் புதுமையைப் புகுத்தியவராக இவர் அறியப்படுகிறார். தம்முடைய படைப்பிலக்கியத்தில் பகுத்தறிவு மற்றும் சுயமரியாதைக் கருத்துக்களை ஊடுபாவாக அமைத்துச் செயல்பட்டவர். பள்ளி ஆசிரியர், பாடநூல் ஆக்கியவர், எழுத்தாளர், அச்சக அதிபர், பத்திரிகையாளர், கட்டுரையாளர், கவிஞர், சொற்பொழிவாளர் என்று பன்முகம் கொண்டவர். தமிழாசிரியர்கள் வேட்டியும், தலைப்பாகையும், கோட்டும் அணிந்து கொண்டிருந்த மரபில் இருந்து மாறி, ஐரோப்பிய உடையில் முழுக்கால் சட்டை, கோட்டு, முழுக்காலணி (Shoe) என்று வலம் வந்த முதல் நவீனத் தமிழாசிரியர். அதே நேரம் ஏழை மாணவர்களுக்கு இலவயமாகக் கல்வி அளித்து அவர்களது வாழ்க்கையை மேம்படுதுதவதைத் தனிச் சிரத்தையெடுத்துச் செயல்படுத்தியவர்.
Add Comment