12. மாற்று
ஆதித் தனிமத்தின் சிந்தையில் வசிக்கும் எனக்கு அற்புதமென்றோ, சாதாரணமென்றோ பகுத்துணர ஒன்றுமில்லை. நிகழும் அனைத்தும் தன் இயல்பில் நிகழ்வன மட்டுமே. நீங்கள் சொல்வீர்கள். இந்தச் செயலுக்கு அது காரணம். அந்தத் தருணத்துக்கு இவர் காரணம். இது அதனால் நிகழ்ந்தது. அது அதிசயம். இது அற்புதம். மற்றவை சாதாரணம்.
நான் அப்படிக் கருத இயலாது. இந்தச் சமயத்தில் இச்செயல் நடைபெற யார் காரணம் அல்லது எது காரணம் என்பது மட்டுமே தெரியாத ஒன்றாக இருக்குமே தவிர, எல்லா செயல்களும் எல்லா தருணங்களும் ஆதித் தனிமம் என்றோ சிந்தித்து முடித்துவிட்டவை என்பதை அறிவேன். வேறு விதமாகச் சொல்வதென்றால், அற்புதம் என்ற ஒன்றில்லை. அது அனைத்தையும் சிந்தித்து முடித்துவிட்டது உள்பட.










Add Comment