பிப்ரவரி 28, சனிக்கிழமை காலை ஆறு மணிக்கு இஸ்ரேலியப் போர் விமானங்கள் புறப்பட்டன. மூன்று மணிநேரத்துக்குள், ஒரு வளாகத்தில் பதுங்கியிருந்த இரானின் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனி வானிலிருந்து விழுந்த குண்டுகளால் மாண்டார். அவருடன் பல உயர்மட்டத் தலைவர்களும் சாம்பலானார்கள்.
இந்த ஒரே ஒரு தகவல் உலக வரலாற்றை மாற்றிவிட்டது. இந்தப் போரை டிரம்ப் காங்கிரஸிடம் கேட்காமல், ஒப்புதல் பெறாமல் தொடங்கினார். அவருடைய இரண்டாம் பதவிக்காலத்தில் அவர் ராணுவத்தை அனுப்புவது இது எட்டாவது முறை. பதவிக்கு வருவதற்கு முன், ‘வெளிநாட்டு ஆட்சிகளைக் கவிழ்ப்பதில் நான் தலையிட மாட்டேன்’ என்று வாக்குறுதி கொடுத்தவர், இப்போது அதை மீறிச் செயல்படுகிறார். ஏன்?
டிரம்ப் நிர்வாகம் காரணங்களை அடுக்குகிறது. இரான் அணுசக்தித் திட்டம் பேச்சுவார்த்தையை உடைத்தது. சிரியா, ஏமன், இராக்கில் இரான் ஆதரிக்கும் ஆயுதக் குழுக்கள் ரத்தம் சிந்தியிருக்கின்றன. 37,000 ஆர்ப்பாட்டக்காரர்களை இரானிய அரசு கொன்று குவித்திருக்கிறது. ஹோர்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்தை இரான் தடுத்திருக்கிறது; இது உலக எண்ணெய் வினியோகத்தை நேரடியாகப் பாதிக்கிறது.















Add Comment