டொனால்ட் டிரம்பின் அதிகாரத் திமிர், உலகின் மிகப்பெரிய அமெரிக்கப் போர்க்கப்பலை நாற்றமடிக்க வைத்திருக்கிறது. என்ன பிரச்சினை? அதைத் தெரிந்து கொள்வதற்கு முன் ஒருமுறை வரலாற்றைத் திரும்பிப் பார்ப்போம்.
உலகின் வல்லரசாகத் தன்னைக் காட்டிக்கொள்ள அமெரிக்கா எந்த எல்லைக்கும் போவதற்குத் தயங்குவதில்லை. எத்தனை அதிபர்கள் மாறினாலும் மாறாத காட்சி இது.
உதாரணமாக, வட கொரியாவின் ஆதிக்கத்தை ஒடுக்குவோம் என்று 1950ஆம் ஆண்டில் தென் கொரியாவில் முகாம் அடித்த அமெரிக்க வீரர்கள் இன்று வரை அங்கிருந்து நகரவில்லை. சொல்லப்போனால், உலகின் மிகப்பெரிய அமெரிக்க ராணுவ வீரர்களின் முகாம் தென் கொரியாவில் உள்ள பியோங்டேக்கில்தான் அமைந்திருக்கிறது. கட்டப்பஞ்சாயத்து என்று கூறுவோமே, அதுபோல அமெரிக்கா உலகம் முழுவதும் ஆலமரத்தடித் தீர்ப்பை வழங்கிக் கொண்டிருக்கிறது. அதுவும் அழைப்பில்லாமல். இதோ இப்போது இரானிலும் கால் பதித்திருக்கிறது.
















Add Comment