ஒரு சைரன் சத்தம். அதே நேரத்தில் ஒவ்வொருவரின் அலைபேசிகளிலும் உள்துறை அமைச்சகத்திலிருந்து வந்த ஒரு குறுஞ்செய்தி. பொதுமக்கள் அருகிலிருக்கும் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுங்கள் என்னும் செய்தி. அடுத்து தாக்குதலின் நேரடிக் காட்சியும் ஒலியும். ஜன்னல்களில் வரிசையாக ட்ரோன்கள் பறப்பது தெரியும், அல்லது வானத்தில் ஏவுகணைகளாக இருக்கும். சில நிமிடங்களில் அவை வெடித்துச் சிதறும் சத்தம் கேட்கும்.
ஐந்நூறு மீட்டர் தொலைவில் வெடிக்கும் குண்டுகள் அவர்கள் நின்று கொண்டிருக்கும் ஜன்னல்களையும் அடுக்குமாடியையும் அதிரச் செய்யும். அதிர்வுகள் முடிந்த பின்பு தாங்களும் தங்கள் குடும்பங்களும் உயிருடன் இருப்பதை உறுதிசெய்து கொள்வார்கள். தாக்குதல் முடிந்து விட்டதை அடுத்த சைரன் சத்தம் தெரிவிக்கும். போர்க்களத்தை நேரில் காணும் அதிர்ச்சியிலிருந்து விடுபட்டு, பாதுகாப்பான இடங்களை நோக்கி நகர வேண்டும். அப்படி ஒன்று இல்லாவிடில் வானத்தில் ஏதோவொன்று பறப்பது தெரியும்போதும் அது அவர்கள் மேல் விழுந்து வெடித்துவிடக் கூடாது எனப் பிரார்த்தனை செய்ய வேண்டும். இதுவே மத்தியக் கிழக்கில் வாழும் மக்களின் தற்போதைய நிலை.















Add Comment