மெக்சிகோவில் உள்ள குவாடலஜாரா நகரில் இன்னும் சில மாதங்களில் உலகப் புகழ்பெற்ற FIFA கால்பந்து போட்டி நடைபெற உள்ளது. ஆனால் இந்நேரம் பார்த்து அங்கே கலவரமும் கோரச் சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன. மெக்சிகோ மக்கள் இந்நகரை ‘பேய்கள் உலவும் ஊர்’ என்று பயந்து தவிர்த்து வருகின்றனர். இதற்கெல்லாம் காரணம் ஒருவர்தான். உலகப் புகழ்பெற்ற போதைப்பொருள் கார்டெல் தலைவர் ‘எல் மென்சோ’. கடந்த வாரம் மெக்சிகோ அரசு அவரைக் கொன்றதால் உலகின் கவனம் மீண்டும் மெக்சிகோவின் மீது திரும்பியுள்ளது.
தபால்பா, குவாடலஜாராவுக்கு அருகிலுள்ள ஒரு சிறிய சுற்றுலா நகரம். பாண்டிச்சேரியை நினைவூட்டும் வண்ணமயமான கட்டடங்கள், தேவாலயங்கள், பாரம்பரிய உணவு வகைகள், கலாசாரச் செழிப்பு. இவை அனைத்தும் இந்நகரின் அடையாளங்கள். மேலும் ‘சியரா மாட்ரே’ மலைத்தொடர்கள் இதன் இயற்கை அழகை அதிகரிக்கின்றன. இதன் பழைமை மற்றும் இயற்கையின் கலவையால் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் எப்போதும் இங்கு குவிந்திருப்பார்கள். ஆனால் கடந்த பத்து நாட்களாக இந்நகரத் தெருக்கள் வெறிச்சோடி உள்ளன.
‘ஜலிஸ்கோ நியூ ஜெனரேஷன் கார்டெல்’ (CJNG) எனப்படும் மிகப்பெரிய போதைப்பொருள் மாஃபியா அமைப்பின் தலைவர் ‘எல் மென்சோ’. கடந்த பத்து ஆண்டுகளாக உலகம் முழுவதும் அவரைத் தேடிக் கொண்டிருந்தனர். கடந்த பிப்ரவரி 22 அன்று தனது பல காதலிகளில் ஒருவருடன் தபால்பாவில் ரகசியமாகத் தங்கி இருந்துள்ளார். இந்தக் காதலர்களின் சந்திப்பு அமெரிக்காவுக்குத் தெரிந்துவிட்டது. விஷயம் தெரிந்த பிறகும் சும்மா இருப்பார்களா என்ன?















Add Comment