Home » மிச்சமின்றி உச்சம் தொடு – 20
சூப்பர் ஸ்டார் நாள்தோறும்

மிச்சமின்றி உச்சம் தொடு – 20

மோகன் லால்

மலையாளத் திரையுலகை பிரேம் நசீர், மது, சத்யன் இந்த மும்மூர்த்திகள் கட்டியாண்டார்கள். அந்தச் சமயத்தில் 1978இல் ஒரு நடிகர் அறிமுகமானார். பத்தனம்திட்டா மாவட்டத்தைச் சேர்ந்தவர். பிறந்த வருடம் 1960. சிறு வயதில் பள்ளியில் படிக்கும் போதே தொண்ணூறு வயது கிழவனாக நடித்து முதல் விருது வாங்கினார்.

பதினெட்டு வயதில் அவர் நடித்த படம் திறநோட்டம். மனநிலை பிறழ்ந்த ஒரு கதாபாத்திரம். நம்பிக்கையுடன் இருந்தார் ஆனால் படம் வெளியாகவில்லை. பின்னர் ஓர் அறிமுக இயக்குநரின் படத்தில் வந்தது ஒரு வாய்ப்பு. அவர் பெயர் பாசில். தன்னுடைய படத்தில் அழகான, ஆபத்தான வில்லனாக நடிக்க ஒருவரைத் தேடிக் கொண்டிருந்தார். அவர் கண்ணில் பட்டார் அந்த நடிகர்.

அந்தப் படத்தின் நாயகனான சங்கர், நாயகியான பூர்ணிமா ஜெயராம் இவர்களைவிட அந்த வில்லனை மக்கள் கவனித்தார்கள். என்ன நடிப்புடா என்று பாராட்டிக் கொண்டே வெளியே வந்தார்கள். ஒரே படத்தில் அனைவரும் கவனிக்கப்படும் நடிகரானார். படத்தின் பெயர் மஞ்சில் விரிஞ்ச பூக்கள். அந்த நடிகரின் பெயர் மோகன்லால் விஸ்வநாதன் நாயர். அனைவருக்கும் மோகன்லால். செல்லமாக லாலேட்டன். அவருடைய சுருள்முடி, இறங்கிய தோள்கள், இலகுவான நடிப்பு, தீட்சண்யமான பார்வை, அலட்சியமான உடல் மொழி இவை அனைத்தையும் ஒரே படத்தில் வெளிக் கொண்டு வந்தார் இயக்குநர் பாசில்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

error: Content is protected !!