156. தவிப்பதும் தழைப்பதும்
வெளி சாம்பர் பூசியிருந்தது. தருக்கள் அசையாமல் நின்றிருந்தன. தட்பமும் இல்லாமல் வெப்பமும் இல்லாமல் காற்றில் நிறைந்திருந்த புழுக்கத்தை வேட்டனின் சுவாசத்தினின்று அறிந்துகொண்டேன். அவனது சிந்தையுமே அவ்வண்ணம்தான் இருந்தது. ஒரு சஞ்சலைக் கீற்றைத் தாவிப் பிடித்துச் சாறாக்கிச் சிந்தையெங்கும் தெளித்து நிறைத்தாற்போன்ற பரவச உணர்வுடன் சார்வாகன் நதியில் குதித்து நீந்திச் செல்லத் தொடங்கியபோது நான் வேட்டனைக் கருதி அவனது சிந்தைக்கு இடம் பெயர்ந்து வந்திருந்தேன். அவன் உளச் சோர்வில் இருக்கலாம், சினத்தில் இருக்கலாம், வெறி கொண்டிருக்கலாம், துக்கத்தில் துவண்டிருக்கலாம் என்று நினைத்தேன்.
உண்மையில் அது எனக்கு வியப்புத்தான். இவை எதுவுமே இல்லாமல் வேட்டனின் சிந்தை அப்போது ஒரு பாழ்வெளியாக இருந்தது. முதல் முதலில் சார்வாகனின் சிந்தையைக் கருதி அதனுள் புகுந்தபோது எதை உணர்ந்தேனோ அது. எப்படி உணர்ந்தேனோ அப்படி. காற்றிருந்தாலும் மூச்சடைக்கச் செய்துவிடும் மாய வெறுமை. அதிலிருந்து மீண்டு வெளியேற அவன் மிகவும் போராடிக்கொண்டிருந்ததையும் கண்டேன். அதுகூட எளிதுதான். ஆனால் தன் மனத்தின் வெக்கையையும் வெறுமையையும் மாயமுனியோ மல்லனோ அறிந்துவிடலாகாதெனும் தவிப்பு அவனிடம் மேலோங்கி இருந்ததைத்தான் முதன்மையாக அறிந்துணர்ந்தேன்.
அவர்கள் இருவரும் தமது கட்டாய நித்திரைக் காலத்தை நிறைவு செய்து மீண்டு வந்திருந்தார்கள். அவனெதிரேதான் அமர்ந்திருந்தார்கள்.
கொதிப்புகள் தணிந்துவிட்டிருக்கின்றனவா?











Add Comment