Home » ரகசியம், பரம ரகசியம் – 5
நாள்தோறும் ரகசியம்

ரகசியம், பரம ரகசியம் – 5

மெளனம்

நடைப்பயிற்சி செல்லும்போது வழியில் அக்கம்பக்கத்து நண்பர்களையும் தெரிந்தவர்களையும் சந்திப்போம். வணக்கம் சொல்ல நிற்போம். அதிலிருந்து பேச்சு தொடங்கிவிடும். நமக்கே தெரியாமல் ஐந்து நிமிடம் ஆகிவிடும். இப்படி நான்கைந்து பேரிடம் பேசினால் இருபது முதல் இருபத்தைந்து நிமிடம் போய்விடும். நடைப்பயிற்சிக்கென ஒதுக்கிய மொத்த நேரமும் இப்படி வீணாகிவிடும். உடற்பயிற்சியின் நோக்கமும் தவறிவிடும்.

இது ஒரு நாளின் கதை அல்ல. தினமும் நடக்கும் நடைப்பயிற்சியில் இது தொடர்கதை. வாரத்துக்கு ஐந்து நாட்கள் இப்படி நேரம் போனால், மாதத்துக்குப் பல மணிநேரம் வீண். அந்த நேரத்தை உடலுக்குப் பயன்படும் விதமாகப் பயன்படுத்தி இருக்கலாம். அல்லது நமக்குப் பிடித்த வேறு எதையாவது செய்திருக்கலாம். சிறு பழக்கம் என நினைத்து இதைப் புறக்கணிக்க வேண்டாம்.

வணக்கம் சொல்லி, சுகம்தானா என விசாரித்து, புன்னகையுடன் நகர்ந்துவிடலாம். நீண்ட உரையாடலுக்கு நடைப்பயிற்சி நேரம் சரியான நேரம் இல்லை. பேச வேண்டுமெனில் தனியாக நேரம் ஒதுக்கிப் பேசலாம். ஆனால் நடக்கும் நேரத்தைப் பேச்சுக்காகத் தியாகம் செய்ய வேண்டாம்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

error: Content is protected !!