Home » ரகசியம், பரம ரகசியம் – 4
நாள்தோறும் • ரகசியம்

ரகசியம், பரம ரகசியம் – 4

கருத்துக் குப்பைகள்

அவரவருக்கு ஒரு ரசனை உண்டு, தெரிவுகள் உண்டு. வாழ்க்கையை ரசிக்கக் கலைகள் எப்போதும் உதவியாக இருக்கின்றன. கேளிக்கைகள், விளையாட்டுகளைக் கண்டு ரசிப்பது வாழ்க்கையைச் சுவாரசியமாகக் கொண்டு செல்ல உதவும். ஆனால் அது நமது வெற்றியைக் குலைப்பதாக இருந்துவிடக் கூடாது. ஆனால் நாம் காண்பதென்ன?

ரஹ்மானோ ராஜாவோ ஒரு ஒலிநாடா வெளியிட்டால், உடனே எத்தனை எத்தனை நிலைத்தகவல்கள், விவாதங்கள்? ஒன்றைத் தொடர்ந்து இன்னொன்று என எத்தனை நேரம் விரயமாகிறது? இதனால் ஏற்படும் சினம் அன்றைய தினத்தையே பாழ்படுத்தி விடுகிறது. ஆனால் நீங்கள் யாருக்காக இவ்வாறு விவாதம் செய்தீர்களோ அவர்களுக்கு நீங்கள் இருப்பதே தெரியாது என்பதுதான் உண்மை.

இசைக் கலைஞர்கள்தான் என்றில்லை, திரைப்பட நடிகர்கள் முதல் இப்போது புதிதாக ஒரு திறன்பேசி வெளியீடு நிகழ்ந்தால் கூட விவாதம் நடக்கிறது. இப்படி இருந்திருக்கலாம், நானாக இருந்தால் இப்படிச் செய்திருப்பேன் என்றெல்லாம் ஆயிரம் கருத்துகள். அமெரிக்காவில் இருக்கும் இந்தியர்கள் கூட முதல் நாள் முதல் காட்சி பார்த்துக்கொண்டே, உடனுக்குடன் நிலைத்தகவலில் கருத்து சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். பிடிக்காத இசைக்கலைஞரின் நிகழ்ச்சி என்றால் மோசமான கருத்து வந்து கொண்டே இருக்கிறது. இதற்குக் கவன ஈர்ப்பைத் தவிர வேறென்ன காரணமாக இருக்க முடியும்?

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



உங்கள் எண்ணம்

  • Natarajan Panchanatham says:

    ரகசியம் பரம ரகசியம் மிகவும் பயனுள்ள தொடர்.
    தொடக்கம் மகளிருக்கானது போன்று தோன்றினாலும்
    அடுத்தடுத்த தொடர்கள் பொதுவானவை.
    முக்கியமாக இளையோருக்கானவை.
    முதல் இரண்டு தொடர்கள் மகளிருக்கானவை என்று
    எடுத்துக்கொள்ளவும் கூடாது. சமையல் இப்போது
    இருபாலருக்கும் பொதுவானதாகிவிட்டது.

    பாபநாசம் நடராஜன்

Click here to post a comment

error: Content is protected !!