Home » உரி – 165
உரி • நாள்தோறும்

உரி – 165

165. தகப்பன்

அன்றிரவு மூன்றாம் யாமம் முடிவடையவிருந்த நேரத்தில் கருவூர்ச் சித்தர் குடிசைக்குள் இருந்து எழுந்து வெளியே வந்தார். சார்வாகன் அந்தப் பனையடிக் கற்படுக்கையில்தான் உறங்கிக்கொண்டிருந்தான். அவனருகே வந்த கருவூரார், தன் இடக்கரத்தில் வைத்திருந்த ஒரு தருப்பைப் புல்லை அவனது நாசியருகே நொடிப் பொழுது வைத்துவிட்டு எடுத்தார். சார்வாகன் விழித்துக்கொண்டான்.

வா

என்று சொல்லிவிட்டுக் கருவூரார் வேலிப் படலைத் திறந்துகொண்டு வெளியேறி நடக்கத் தொடங்கினார். சார்வாகன் எதுவுமே கேட்காமல் அவர் பின்னால் சென்றான். நாணற்புதர்களைக் கடந்து நதிக்கரைக்கு வந்து சேரும்வரை அவர் எதுவும் பேசவில்லை. சார்வாகனும் எதுவும் கேட்கவில்லை. நதிக்கரையில் ஓரிடத்தைத் தேர்ந்தெடுத்துக் கருவூரார் அமர்ந்தார். அவனையும் அமரச் சொல்லிக் கரம் அசைத்தார். அமர்ந்த மறுநொடியே சார்வாகன் கேட்டான்,

ஏதோ பேச விரும்பி அழைத்தீர்கள், வந்துவிட்டேன். அது உமது சீடருக்கும் தெரிய வேண்டாத ஒன்றாக இருக்குமென எதிர்பார்க்கவில்லை.

ஏன் அப்படி நினைக்கிறாய்?

வேறெதற்கு அங்கே உறங்கிக்கொண்டிருந்தவனை எழுப்பி இங்கே அழைத்து வந்தீர்கள்?

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

error: Content is protected !!