Home » உரி – 173
உரி • நாள்தோறும்

உரி – 173

173. பீடக் கல்

அன்றைக்குப் பகலெல்லாம் நடந்து களைத்து, இருள் சூழவிருந்த நேரத்தில் தத்தனும் அவனது தந்தையும் தஞ்சப்புரிக்கு ஒரு காத நெருக்கத்தில் இருந்த சத்திரமொன்றில் தங்குவதென முடிவு செய்தார்கள். சிவ பண்டிதருக்குக் குட முழுக்கெல்லாம் இரண்டாம்பட்சமாகவே இருந்தது. தத்தன் ஒரு சிறுவன். ஆர்வத்தில் ஏதேதோ சொல்கிறானே அல்லாமல் தங்களால் எல்லாம் அம்மாபெரும் கூட்டத்தில் கோயிலை அணுகிக் குட முழுக்கில் கலந்துகொள்ள முடியவே முடியாது என்பதே அவரது எண்ணமாக இருந்தது. பல்வேறு விதமாக இதனை அவர் தெரியப்படுத்தவும் செய்தார். ஆயினும் தஞ்சப்புரிக்கு தத்தனுடன் வருவதற்கு அவர் சம்மதித்ததன் ஒரே காரணம், அணிமாவைப் பார்த்து வரலாம் என்பதுதான். அதையும் அவர் வெளிப்படையாகவே சொன்னார்.

பரவாயில்லை தந்தையே. குட முழுக்கும் முக்கியம், அணிமாவும் முக்கியம். நானுமே புறப்படும்போது அவளிடம் சொல்லிக்கொள்ளாமல் வந்துவிட்டேன்,

என்று தத்தன் சொன்னான்.

நீ அடிக்கடி அவளைச் சென்று சந்திப்பாயா?

அதிலென்ன ஐயம்? இரண்டு நாள்களுக்கொரு முறையாவது அவள் வீட்டுக்குச் சென்று விடுவேன். அணிமாவின் பிள்ளைக்கு நானென்றால் உயிர். கண்டதும் பாய்ந்து வந்து தோளில் ஏறிக்கொண்டுவிடுவான்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

error: Content is protected !!