Home » ரகசியம், பரம ரகசியம் – 22
நாள்தோறும் • ரகசியம்

ரகசியம், பரம ரகசியம் – 22

வெற்றிக்கு ஏது இடைவெளி?

ஒரு வேலை முடிந்து அடுத்தது தொடங்கும் முன் சிறு இடைவெளி கிடைக்கும். அது பத்து நிமிடமாக இருக்கலாம். இருபது நிமிடமாகவும் இருக்கலாம். பெரிய வேலை எதையும் அதில் தொடங்க முடியாது. அதனால் அந்த நேரம் கவனிக்கப்படாமலே கரைந்துவிடுகிறது. ஆனால் ஒரு நாளில் இப்படிப் பல இடைவெளிகள் வரும். சேர்த்துப் பார்த்தால் அது ஒரு மணிநேரத்தைத் தாண்டும்.

பிள்ளைகளை வகுப்புகளுக்கு அழைத்துச் செல்கிறோம். விளையாட்டு, கராத்தே, பாட்டு என ஏதாவது இருக்கும். வகுப்பு முடியும்வரை வெளியே காத்திருக்கிறோம். அந்த நேரத்தில் கையோடு கொண்டு சென்ற புத்தகத்தைப் படிக்கலாம். அடுத்த நாளுக்கான வேலை அட்டவணையை எழுதலாம். அலுவல் சாராத மின்மடல்களுக்குப் பதில் எழுதலாம். நீண்ட நாளாகப் பேச நினைத்த நண்பரை அழைக்கலாம். அந்த அழைப்பையும் பயனுள்ளதாக மாற்றிக்கொள்ள வேண்டும். தேவையில்லாமல் நம் மனதை வருத்தும் செய்திகள் பேசலாகாது. காத்திருப்பு சலிப்பாக இருக்காது. ஒரு வேலையும் முடிந்திருக்கும்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

error: Content is protected !!