Home » உரி – 174
உரி • நாள்தோறும்

உரி – 174

174. ஒன்றறுத்தல்

இந்நீண்ட பெருங்காதைக்குள் நான் உட்புகுந்த நொடி தொடங்கி முற்றிலுமாக வெளியேறி அகன்ற கட்டம்வரை நடந்த அனைத்தையும் அமைதியாக ஒருமுறை எண்ணிப் பார்க்கிறேன். பொருளோ உயிரோ உணர்ச்சியோ ஒலிக் குறிப்போ இவை நிகர்த்த வேறெதுவுமோ இன்னமும் வழங்கப்படாத எனக்கு மகிழ்ச்சி கொள்ளவோ வருந்தவோ பதற்றமடையவோ ஏதுமில்லை. மனிதர்கள் அடிக்கடி அதிர்ச்சியடைகிறார்கள். எனக்கு அதுவுமில்லை என்றுதான் எண்ணிக்கொண்டிருந்தேன். ஆனால் முதல் முறையாக உயிரினங்களுக்கு மட்டும் நேர்கிற அதிர்ச்சி என்கிற ஒன்றனுக்கு நானும் ஆட்பட நேர்ந்தது. அதனைத்தான் இப்போது விவரிக்க இருக்கிறேன். நான் சற்றும் எதிர்பாராதபோது நடந்த மிகக் குரூரமான படுகொலைச் சம்பவம் அது. விநாடிக்கும் குறைவான நேரத்தில் நடந்து முடிந்துவிட்டதுதான். ஆனால் உணர்ச்சி என்ற ஒன்றில்லாத நானே அதிலிருந்து மீள்வதற்கு நெடுநேரமானது. சார்வாகனின் தாயை இருவேறு பிறவிகளில் வேட்டன் எவ்விதமாகக் கொலை செய்தான் என்பதை விவரித்திருக்கிறேன். இப்போது சொல்லவிருப்பது அதனின்று மிகவும் வேறுபட்டது. மண்ணில் தோன்றிய அத்தனைக் கலைஞர்களினும் உயர்ந்த பெருங்கலைஞன் ஒருவனால் மட்டுமே அப்படியொரு கொலையை வடிவமைக்க முடியும்.

தஞ்சப்புரிக்குச் செல்லும் வழியில் பாரதாய தத்தன் சார்வாகனைக் குறித்துத் தன் தந்தையான சிவ பண்டிதருக்கு எடுத்து சொல்லிக் களைத்து உறங்கியதும், வேட்டன் என்ன முடிவெடுத்திருக்கிறான் என்று அறிவதற்காக அவனது சிந்தையைக் கருதி இடம் பெயர்ந்தேன். ஏனோ அவனது சிந்தையை எட்டித் தொட்ட உடனேயே எனக்கு மயூரமுகியின் சிந்தையை மீண்டுமொரு முறை அளைய முடிந்தால் நல்லதெனத் தோன்றியது. மகளென்ற ஒரு மாய வடிவை வார்த்தெடுத்து அதனுள் தனது சிந்தையை ஒளித்திருந்தவள், அவ்வடிவத்தைக் கலைத்துவிட்ட பிறகு தனது சிந்தையை எங்கே வைத்திருப்பாள் என்று தேடுவதற்கு எனக்குப் பொழுதற்று இருந்தது. இப்போது அதனைச் செய்துவிடலாமென முடிவு செய்து மயூரமுகியின் சிந்தையைக் கருதினேன். நான் எதிர்பார்க்கவில்லை. அவள் தனது சிந்தையைத் தன்னிடத்திலேயேதான் வைத்திருந்தாள்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

error: Content is protected !!