Home » காஸாவை நாசம் செய்த நாஸா
உலகம்

காஸாவை நாசம் செய்த நாஸா

‘நான் இப்போதும் நாஜிக்களைத் தீயவர்களாகவே பார்க்கிறேன். அப்படியெனில் நான் யார்?’ – ஒரு இஸ்ரேல் ராணுவ வீரர்.

நாஸா. இஸ்ரேல் எதிர்ப்பாளர்களும் பாலஸ்தீன எதிர்ப்பாளர்களும் கடந்த சில வாரங்களாக அடிக்கடி உச்சரிக்கும் சொல் இது.

‘நாஸா’ ஒரு புலனாய்வு ஆவணப்படம். யுவால் ஆப்ரகாம் (Yuval Abraham), ரேச்சல் ஷோர் (Rachel Szor) என்ற இரு இஸ்ரேலியர்கள் இயக்கிய ஹீப்ரூ மொழிப் படம். கடந்த செப்டம்பர் பத்தாம் தேதி, வெனிஸ் சர்வதேசத் திரைப்பட விழாவில் இப்படம் வெளியிடப்பட்டது. படம் முடிந்ததும் பார்வையாளர்கள் எழுந்து நின்று சுமார் இருபத்தைந்து நிமிடங்கள் இடைவெளியின்றிக் கை தட்டிப் பாராட்டினார்கள்.

வேறு எந்தத் திரைப் படைப்புக்கும் இப்படியொரு வரவேற்பு இதுவரை கிடைத்ததில்லை. விழா நடுவர்களின் சிறப்புப் பரிசையும் பெற்றது நாஸா. அதற்காக இது ஏதோ கொண்டாட்டமான படம் என்று நினைத்து விடாதீர்கள். பார்வையாளர்கள் அத்தனை பேருடைய மனங்களையும் உலுக்கியெடுக்கும் படைப்பு இது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!