Home » மோசடி ஒரு குடும்பத் தொழில்
உலகம்

மோசடி ஒரு குடும்பத் தொழில்

ஷிரந்தி ராஜபக்ஸ

சீமாட்டி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலை. இலங்கையின் தலைநகர் கொழும்புவில் உள்ள, சிறுவர்களுக்கான மிக முக்கியமான வைத்தியசாலை இது. இந்த வைத்தியசாலைக்கு CT ஸ்கேனர் இயந்திரமொன்று தேவைப்படுகிறது. இந்த இயந்திரத்தை வாங்கித் தருவதற்கு நாட்டின் அப்போதைய முதற்பெண்மணி தலைமையில் இயங்கிய ஒரு அமைப்பு முன்வருகிறது.

அந்த அமைப்பின் பெயர் சிரிலிய சவிய. இலங்கையின் அரச வங்கிகளுள் ஒன்றான மக்கள் வங்கியில் இதன் கணக்கு திறக்கப்படுகிறது. வங்கிக் கணக்கு விபரத்தில் தேசிய அடையாள அட்டை இலக்கம் குறிப்பிடப்பட வேண்டும். இந்தியாவுக்கு ஆதார் என்றால் இலங்கைக்கு இந்த அட்டை. இதன் இலக்கம் 222222222 என்பதாகும். முதல் இரண்டு இலக்கம் பிறந்த ஆண்டைக் குறிப்பது. சிரிலிய சவிய அமைப்பை நடாத்திய முதற்பெண்மணி 1953இல் பிறந்தவர். அப்படி இருக்க 1922ஆம் ஆண்டின் இலக்கத்தில் எப்படி அடையாள அட்டை இருக்க முடியும்?

இது ஒரு பிரச்சினை என்றால், அனைத்து இலக்கங்களும் ஒன்றாய் அமையும் ஓர் அடையாள அட்டை இலங்கையில் இவர் ஒருவருக்கு மட்டும்தான் இருக்க வேண்டும். முதற்பெண்மணி என்பதால் அப்படியும் இருக்கலாம் என்று அதிகாரிகள் கருதியிருக்கக் கூடும். சரி, CT ஸ்கேனர் தருவதாகச் சொன்னார்கள் இல்லையா? அதற்காக மற்றுமொரு அரச வங்கியான தேசிய சேமிப்பு வங்கியின் தலைவராக இருந்த பிரதீப் காரியவசம் என்பவரிடம் உதவி கேட்டிருக்கிறார்கள்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!