38. சிசு
சிட்டைக் கண்டதுமே எனக்குத் தெரிந்துவிட்டது. அது அபுதுவோ காளத்தியோ கொடி முல்லையோ வேறெவரோ. அவன் தஞ்சப்புரியில் காலெடுத்து வைக்கலாகாதென்று எப்போது நாயனார் சொன்னாரோ அப்போதிலிருந்து அவர்கள் என்னவெல்லாம் செய்யக்கூடும் என்று எண்ணிக்கொண்டிருந்தேன். உதுமானி நாயனாரை நான் ரசிக்கத் தொடங்கியிருந்ததற்கு அது ஒரு வலுவான காரணம். அவரால் சார்வாகனுக்குச் சேதாரமென்று ஏதும் நேராது என்பது தெளிவாக எனக்குத் தெரியும். சர்ப்பத்தை ஏவிக் கொத்தச் செய்தாலும் நஞ்சு நட்டம் தவிர வேறெதுவும் இராது. எனவே திகைக்காமல், பதைக்காமல் நடப்பதைக் காணலாம்.
ஆனால், என்ன செய்து அவனைத் தடுக்கப் போகிறார் என்பது புதிர். அவன் தஞ்சப்புரியில் கால் வைக்கவே கூடாதென்று அவர் நினைப்பதற்கான நியாயம் ஒன்று இருக்குமல்லவா? அதன் தீவிரத்தை இதனைக் கொண்டு கணிக்கலாம் என்று நினைத்தேன்.










Add Comment