Home » உரி – 59
உரி • நாள்தோறும்

உரி – 59

59. காலம் ஆகாதவன்

கருகி உதிர்ந்து கிடந்த கூவிளத்தை உற்று நோக்கியபடி நெடுநேரம் நின்றிருந்தான். காற்றில் அதன் துகள்கள் கலைந்து பறந்ததைப் பொருட்படுத்தவில்லை. மீதமிருந்த துகள்களின் மீது சீதம் படர்ந்து, அவை பாறையில் ஒட்டிக்கொண்டபோது நெருங்கி அதைத் தன் விரல்களால் துடைத்து எடுத்துப் பார்த்தான். சட்டென்று அதைத் தனது புருவங்களின் மையத்தில் வைத்து மேற்புறமாகக் கோடிழுத்தான். கூவிளம் கருகியதில் அவனுக்கு ஏதோ ஒன்று புலப்பட்டிருக்க வேண்டும். என்னால் அதைக் கண்டறிய முடியவில்லை. ஏனெனில் அதை அவன் அந்த உடலத்துக்குள் இருந்த மனத்தில் சிந்திக்கவில்லை. வேறெங்கோ சிந்தித்து, இங்கே வினையாற்றியிருக்க வேண்டும்.

எனக்கு விளங்காதது இரண்டு. முதலாவது, நான் அனுப்பிய கருவிளம் எவ்வாறு கூவிளமானது என்று தெரியவில்லை. அடுத்தது, அது எப்படிக் கருகியதென்பது. அது கணிக்கவியலாததாக இருந்தது. அதற்கு முயற்சி செய்வது என் சிந்தனைத் திறனுக்கு அப்பாற்பட்ட ஒன்றென யாரோ சுட்டிக்காட்டுவது போலத் தோன்றியது. நல்லது. நான் அம்முனியைக் கருதி, அவனது சிந்தைக்குள் நிறைந்திருந்தேன். அங்கே ஏதேனும் அகப்பட்டாலொழிய எதுவும் துலங்க வழியில்லை.

அவன் தனக்குள் புறப்படு என்று கூறிக்கொண்டான். எதற்கோ ஆயத்தமாவது புரிந்தது. எண்ணிய வேகத்திலேயே ஆழியின் அடியில் உருவாகிச் சுருண்டு மேலே எழும் புயலினைப் போல உருண்டு சுருண்டு துள்ளித் திரும்பி விறுவிறுவெனச் சிகரத்தினின்று இறங்கத் தொடங்கினான்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

error: Content is protected !!