நாளந்தாவின் நூலகம் ‘தர்ம குஞ்ச்’ என்று அழைக்கப்பட்டது. ‘அறத்தின் கருவூலம்’ என்று பொருள்.
கிபி ஆறாம் நூற்றாண்டு தொடங்கி அறுநூறு ஆண்டுகள் இதைப் பற்றித் தொடர்ந்து குறிப்புகள் கிடைக்கின்றன. வரலாற்றில் ஆக்ஸ்ஃபோர்டு, கேம்பிரிட்ஜ் நுழைந்தது பல நூற்றாண்டுகள் பின்னரே.
ரத்னசாகரம், ரத்னோததி, ரத்னரஞ்சகம் என்ற மூன்று கட்டடங்களில் இயங்கியது. நூல்களை ரத்தினம் என்று இப்பெயர்கள் குறிக்கின்றன.
வெளிநாடுகளில் இருந்து மாணவர்கள் பல வருடங்கள் தங்கிப் படித்தனர். பல்கலைக்கழகத்தின் இதயமாக இருந்தது நூலகம். பனையோலைகளில் எழுதப்பட்ட அரிய மூலநூல்கள் பாதுகாக்கப்பட்டிருக்கின்றன. ஒன்பது மாடிகளில் நூல்கள் இருந்தன என்று குறிப்புகள் சொல்கின்றன.
யுவான் சுவாங் போலிகளைக் கண்டு சலிப்புற்றே இந்தியப் பயணத்தைத் தொடங்குகிறார்.
அப்போது நூல் என்பது 30-60 செ.மீ நீளப் பனையோலை. இப்படி இருநூறு அல்லது முன்னூறு ஓலைகள் இணைந்தது ஒரு பொதி. இருபுறமும் எழுதித் துளையிட்ட பலகையில் ஓலைகள் கோர்க்கப்பட்டிருக்கும். பெரிய நூல் பல பொதிகளில் இருக்கும். நூல்களைத் துணிகளில் பெயரிட்டு முடிந்து அலமாரிகளில் வைத்திருப்பார்கள்.















Add Comment