28. போதை மருந்து வேண்டுமா?
அமெரிக்கா படைகளை விலக்கியவுடன் குர்த்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். இதற்காகவே காத்திருந்த துருக்கி, சிரியாவுக்குள் ஊடுருவி குர்த்களைத் தாக்கத் தொடங்கியது.
துருக்கியில் செயல்பட்ட குர்த் அமைப்பான PKK, நீண்டகாலமாகவே தனி குர்த் நாட்டுக்கான போராட்டங்களை மேற்கொண்டு வந்தது. இப்போது SDF பலம் பெறுவது துருக்கிக்கு இன்னும் தலைவலியை அதிகரிக்கும்.
எனவே நேரடியாக ராணுவத்தை இறக்கியதோடு மட்டுமல்லாமல், குர்த்களுக்கு எதிரான குழுக்களையும் உடன் இணைத்துக் கொண்டு தாக்கியது துருக்கி.
துருக்கியைச் சமாளிக்க வேறு வழியைத் தேர்ந்தெடுத்தன குர்த் படைகள். துருக்கிய எல்லைப் பகுதிகளில் ரஷ்யாவின் உதவியைக் கோரிப் பெற்றனர். அந்தக் கூட்டணியால் பதறியடித்த அமெரிக்கா, குர்த்களுக்கு ஆதரவாக மீண்டும் சில படைகளை சிரியாவுக்கு அனுப்பியது.










Add Comment