Home » புத்தர் பூமியில் ஒரு ஸ்மார்ட் நகரம்
உலகம்

புத்தர் பூமியில் ஒரு ஸ்மார்ட் நகரம்

நவம்பர் மாதத் தொடக்கத்தில் பூட்டானின் மௌச் சூ ஆற்றங்கரையில் 108 புத்த ஸ்தூபங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த ஸ்தூபங்கள், புத்தரின் ஞானநிலையைப் பிரதிபலிக்கும் நினைவுச் சின்னங்கள். இந்நிகழ்வில் 40,000க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் பங்கேற்றனர்.

பூட்டானில் உருவாகிக் கொண்டிருக்கும் கெலெபு (Gelephu) நகரத்துக்கான முஸ்தீபுகள் என்று இவற்றைச் சொல்லலாம். புத்த மரபின் மண்டலா வடிவியல் முறைப்படி கெலெபு நகரம் உருவாகி வருகிறது. பூட்டானின் பொருளாதாரத்திலும் ஒட்டுமொத்தத் தெற்காசிய நாடுகளின் வளர்ச்சியிலும் கெலெபு பெரும் பங்கு வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பூட்டானின் 116ஆவது தேசிய தினத்தன்று அந்நாட்டு மன்னர் வாங்சுக், கெலெபு நகரத்துக்கான செயல்திட்டத்தை அறிவித்தார். இந்நகரம் வழக்கமான ஸ்மார்ட் நகரங்களைப் போல் அல்லாமல், இயற்கையும், ஆன்மிகமும், நவீனத் தொழில்நுட்பமும் ஒத்திசைவோடு இயங்கும் பண்பாட்டுத் தலமாக விளங்கும் என்று உறுதியளித்தார்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!