Home » எரியாத நாளில்லை – 27
எரியாத நாளில்லை நாள்தோறும்

எரியாத நாளில்லை – 27

27. இத்லிப்: கடைசிப் போர்க்களம்

ஐ.எஸ் இயக்கத்தை முழுதாக அழித்துவிட வேண்டுமென்ற வேகத்தில் செயல்பட்டுக் கொண்டிருந்தது அமெரிக்கா. SDF மூலம் ஐ.எஸ் இயக்கத்தின் நிலைகள் சரமாரியாகத் தாக்கப்பட்டன. அவர்களின் சிரிய தலைநகரான ரக்காவையும் SDF கைப்பற்றியது.

சிரியாவில் மட்டுமல்லாமல் இராக்கிலும் வலுவிழக்கத் தொடங்கியது ஐஎஸ்.

கிட்டத்தட்ட அழியும் நிலைக்குச் சென்றிருந்த இராக் ராணுவத்துக்கு மீண்டும் உயிரூட்டியது அமெரிக்கா. ஐ.எஸ்ஸிடம் இழந்த பகுதிகளை எல்லாம் அடுத்தடுத்து மீட்கத் தொடங்கியது இராக் ராணுவம். திக்ரித், ரமாதி, மொசூல் என்ன ஒவ்வொரு நகரமாகக் காலி செய்துவிட்டுப் புறப்பட்டது ஐ.எஸ்.

விளைவாக, அவர்கள் வசம் இருந்த எண்ணெய்க் கிணறுகள் பலவும் கைவிட்டுப் போயின. 2015 வரை நாள் ஒன்றுக்கு ஒரு மில்லியன் டாலர் வரையிலான வருமானத்தைக் கச்சா எண்ணெய் விற்பனை மூலம் பெற்றுக் கொண்டிருந்தது ஐ.எஸ். இறுதியில் ஒரு லட்சம் டாலருக்கும் கீழ் குறைந்தது அந்த வருமானம். அதனால் புதிய ஆயுதக் கொள்முதல்கள் போன்றவை பாதிக்கப்பட்டன. இயக்க உறுப்பினர்களுக்கு ஊதியம் அளிப்பதற்கே திணறினர்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

error: Content is protected !!