Home » பொய்யோடு விளையாடு – 25
தொடர்கள் • பொய்யோடு விளையாடு

பொய்யோடு விளையாடு – 25

சவாலான பொய்யர்கள்

ஒருவர் பொய் கூறும்போது அவரிடம் ஏற்படும் உளவியல், உடலியல் மாற்றங்களைப் பற்றி ஏற்கெனவே விரிவாகப் பார்த்திருக்கிறோம். அதன்படி, ஒரு பொய்யுடன் பல்வேறு உணர்ச்சிகள் பிணைக்கப்பட்டிருக்கும்போதும் அறிவாற்றல் சுமை ஏற்படும்போதும் பொய் காட்டும் தடயங்கள் வெளிப்படையாகத் தெரியும். பிடிபட்டால் கடும் தண்டனை கிடைக்கும் என்ற நிலையிலும், குற்ற உணர்வு, பதற்றம், கிளர்ச்சி போன்ற உணர்ச்சிகள் தூண்டப்படும்போதும் பொய்யரிடம் உணர்ச்சிகள் சார்ந்த பொய் காட்டும் நடத்தைகள் நிரம்பி வழிகின்றன. அப்போது, கேள்விகளால் துளைத்து அறிவாற்றல் சுமையையும் அதிகரிக்கும்போது அவர் நிலைகுலைந்து போகிறார்.

சரி, இந்த நடத்தைகளுள் ஒன்றோ சிலவோ பொய்யரிடம் இல்லாது போனால் என்னவாகும்? அட! அப்படிக்கூட நடக்குமா? என்றால், நடக்கும் என்பதே பதில். இவர்கள்தான் சவாலான பொய்யர்கள். டஃப்புக்கே டஃப் கொடுப்பவர்கள். இவர்கள் சிறுபான்மையினர். எனவே, இவர்களை நீங்கள் அடிக்கடிச் சந்திக்கப்போவதில்லை. இருப்பினும் அவர்களைப் பற்றி அறிமுகம் செய்துகொள்வது அவசியம்.

முதலில் நாம் பொய் நோயாளிகளைச் சந்தித்து விடுவோம். இவர்களை மருத்துவ உலகில் Pathological Liars என்று அழைப்பார்கள். இவர்கள் காரணமே இல்லாமல் பொய் சொல்பவர்கள். அதுதான் இவர்களைக் கையாளுவதிலுள்ள பெருஞ்சிக்கல். முன்பே பார்த்தோமல்லவா? பொய்யருக்குப் பொய் சொல்வதற்கான காரணம், அதாவது மோடிவ் நிச்சயமாக இருக்கும். அது இருந்தால்தான் நாம் கற்றுக்கொண்ட பொய்யறியும் வித்தைகள் பலன் தரும். மோடிவ் இல்லாதவர்களிடம் குற்ற உணர்ச்சி போன்ற உணர்ச்சிச் சுமைகள் இருக்காது. இதனால் இவர்கள் நமக்குச் சவாலானவர்கள்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!