Home » உரு – 13
உரு தொடரும்

உரு – 13

Engineer-Of-The-Year விருது விழாவில்

உலகம் சுற்றிய வாலிபன்

சிங்கப்பூரில் வேலையும் அலுவலகச் சூழலும் முத்துவுக்கு முற்றிலும் புதியது. தங்கும் அறையைக் கண்டுபிடித்து மூட்டை முடிச்சுகளைப் பிரிப்பதற்குள், வேலையில் சேர்ந்த மூன்றாவது நாளே வெளிநாடு கிளம்பினார். விமானச்சீட்டைப் பதிவு செய்யும் சேவை மையம் ஒன்று அலுவலகத்தின் உள்ளேயே இருக்கும் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். அந்த அளவுக்கு வெளிநாட்டுப் பயணங்களை சிங்கப்பூர் அலுவலகத்தில் இருந்தோர் மேற்கொண்டனர்.

ஓர் ஆண்டினை நான்காகப் பிரித்து ஒவ்வொரு காலாண்டுக்கும் ஓர் இலக்கை நிர்ணயிப்பார்கள். ஒவ்வொரு மூன்றாவது மாதத்தின் மத்தியிலும் இலக்கை எட்டிவிட முடியுமா என்று ஆராய ஒரு மீட்டிங் இருக்கும். அப்படியொரு சந்திப்புக்கு மேலாளர் பொறுப்பில் இருக்கும் ஐந்து பேரையும் தன் அறைக்கு அழைத்தார் உயரதிகாரி.

“காலாண்டு முடிய இன்னும் இரண்டு வாரங்கள்தான் இருக்கின்றன. கொடுக்கப்பட்ட இலக்குகள் பூர்த்தியாகிவிட்டனவா?” என்று கேட்டார். முத்து உட்பட ஐந்து பேரும் அவரவர் நிலையை விளக்கினர். முத்துவும் அவர் நண்பரும் இலக்கை எட்ட முடியாது என்பதைச் சொல்லின எண்கள்.

“இலக்கை எட்டாத நீங்கள் இருவர் மட்டும் இருங்கள். மற்ற மூவரும் போகலாம்.” என்றார்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!