Home » உரு – 3
உரு தொடரும்

உரு – 3

முத்து நெடுமாறன்

பள்ளிக்கூடம் போகாமலே…

முத்துவின் அம்மாவுக்குத் தையல் கடை வேலை, வீட்டு வேலை எல்லாம் போக வேறொரு சிறப்பு வேலை இருந்தது. பிள்ளைகளைத் தேடும் வேலை.

முத்துவையும் அவர் தங்கையையும் அக்கம்பக்கத்தில் உள்ளோர் தூக்கிக் கொண்டுபோய் விளையாடிக் கொண்டிருப்பார்கள். இருவருமே கொஞ்சம் வெளிர்நிறத் தோலுடையவர்கள். ‘வெள்ளைக்காரப் பிள்ளை’ என அள்ளிக் கொண்டு போய்ச் செல்லம் கொஞ்சுவார்கள். நாள்தோறும் தம் பிள்ளைகள் யார் வீட்டில் இருக்கிறார்கள் என விசாரித்துக் கண்டுபிடித்துக் கூட்டிவருவார் முத்துவின் அம்மா.

கொஞ்சம் வளர்ந்த பிறகு கண்ணாமூச்சியும் காண்டா கவுண்டியுமாகக் கழிந்தன முத்துவின் இளைமைப் பொழுதுகள். பக்கத்து வீட்டு மதிவாணன், உற்ற தோழன். காய்ந்த ரப்பர் மரத்தின் விதைகள்தான் முத்துவின் பிரதான விளையாட்டுப் பொருள். காய்ந்த விதையின் மேலும் கீழும் துளைகள் இட்டு தென்னங்குச்சியை நுழைத்துத் தலையில் ஐஸ் குச்சி ஒன்றைச் சொருகி, குழந்தை சேலையைக் கட்டத் தெரியாமல் சுற்றிக் கொள்வது போல குச்சியில் நூலைச் சுற்றி பக்கவாட்டு ஓட்டை வழியாக வெளியே கொண்டுவந்தால் போதும். விளையாட்டுச் சாதனம் தயார். நூலை இழுப்பதும் விடுவதுமாகச் செய்து கொண்டே இருந்தால் ஐஸ் குச்சி ஹெலிகாப்டர் புரபல்லர் மாதிரிச் சுற்றும்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!