நிலவின் ஒரு துண்டு எவ்வளவு காசு பெறும்? 1969-ஆம் ஆண்டில் அதன் விலை சரியாக இருபத்தைந்து பில்லியன் டாலர்கள். அப்பல்லோ-11 குழுவினர் நிலவைத் தொட்டுத் தழுவி, அதன் வெண்பஞ்சுத் தரையின் பாகங்கள் சுமார் இருபது கிலோவைப் பூமிக்குப் பொதி செய்து எடுத்து வந்தார்கள். இந்த மொத்தத் திட்டத்துக்கும் பணமாக இருபத்தைந்து பில்லியன் டாலர்கள் செலவானாலும், சொல்லி முடிக்கவே முடியாத எண்ணற்ற செலவுகள் பல (மனித உயிர்கள் உட்பட) உள்ளடங்கியிருந்தன. கொண்டு வந்த பொதியில் சிறு கற்கள், மணல், பெரிய பாறைகள் எல்லாமே இருந்தன.
பூமியின் ஆய்வுக்கூடங்கள் அந்தத் துகள்களை வைத்து உள்ளும் புறமும் அலசி ஆராய்ந்து நிலவின் கனிமங்கள் பற்றியதொரு முடிவுக்கு வர முயன்றன. சிலரின் கருத்துப் படி, முதலாம் உலகப் போரில் ஆரம்பித்த பனிப்போர், இந்த சம்பவத்தோடு முடிவுக்கு வந்து விடுகிறது. நிலவுக்குப் போகத்தானே இத்தனை ஆட்டமும் நிகழந்தது. இதோ அமெரிக்கா போய்விட்டது. கேம் ஓவர்.
Add Comment