நான் அங்கு சுகமா, நீ இங்கு சுகமே, நலம், நலமறிய ஆவல் என்பது தமிழ்த் திரையுலகில் ஒரு புகழ்பெற்ற பாட்டு. பார்க்காமலேயே காதல் என்ற பொருண்மையில் வெளிவந்த அந்தத் திரைப்படத்தில் நாயகனும், நாயகனும் அஞ்சல்கள் வழியே மட்டும் ஒருவரை ஒருவர் தொடர்பு கொண்டு இருக்கும் போது அவர்களிடையே இணக்கம் வந்து நேசம் மலர்ந்து விடுவதாகக் கதை. திரைப்படம் வந்த காலத்தில் வித்தியாசமான திரைப்படம் என்று அது சிறிது நன்றாக ஓடியது. மக்களுக்கு நாயகனும், நாயகியும் அஞ்சல்கள் வழியாக மட்டும் ஒருவரை அறிந்து கொண்டு, நேசிக்கத் தொடங்குகிறார்கள் என்பது, திரைப்படம் வந்த காலத்தின் புதுமையாகத் தோன்றியதால் அத்திரைப்படம் வெற்றி பெற்றி விட்டது.
இதைப் படித்தீர்களா?
நிச்சயமாகவே அவன் ஒரு சாமானிய மனிதனல்லன். அதில் எங்கள் யாருக்கும் இரண்டாம் கருத்தில்லை. ஆனால் எந்த விபரீதத்துக்கும் இதுவரை அவன் காரணமாக இருந்ததில்லை.
கடமை என்ற சொல்லில் அனைத்தையும் நியாயத்தின் வட்டத்துக்குள் கொண்டு நிறுத்திவிட முடியும்தான். ஆனால் அதன் உள்ளோடிய கள்ளத்தனத்தை விழிப்புடன் கவனித்தேன்.















Add Comment