தொண்ணூறுகளின் தொடக்கத்தில் இணையம் என்றாலோ அதன் பயன்பாடு பற்றியோ பெரிதாக யாருக்கும் தெரியாது. அப்போதுதான் மின்னஞ்சல் வசதி பொதுமக்களுக்கு பொதுப்புழக்கத்தில் இந்தியாவில் அறிமுகமானது. யாகூ போன்ற இணையக்களங்கள் (டொமைன்) பல்வேறு வசதிகளுடன் மின்னஞ்சல் வசதியையும் பொதுப்பயனர்களுக்காக வழங்கத் தொடங்கின. Hotmail 1996’ல் பொது மின்னஞ்சல் வசதியை வழங்கியது. அதே ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் தான் (ஆகத்து 1996), சுடான்ஃபோர்டு கணினி அறிவியல் பட்டப்படிப்பில் படிப்பதற்காக இணைந்த லாரி பேஜ் மற்றும் செர்ஜி பிரின் என்ற இரண்டு மாணவர்கள், இணையப் பக்கங்களை ஒன்றுடன் ஒன்று தொடர்பு படுத்தும் வசதிகளைப் பற்றி ஆராயத் தொடங்கினார்கள். பிரின்னுக்கு இருந்த கணக்கிய அறிவு, அவர்களை ஒரு இணையத் தரவரிசை கணிப்பானை ( Page rank algorithm) வடிவமைக்கத் தூண்டியது. இந்த அமைப்பை அவர்கள் சுடான்ஃபோர்டு பல்கலையின் தனிப்பட்ட வலைமுகப்பிற்குற்தான் முதலில் தொடங்கினார்கள்.
இதைப் படித்தீர்களா?
மீண்டும் மொழி அரசியல் தலையெடுக்கத் தொடங்கியிருக்கிறது. இம்முறை கல்வி அமைச்சர் தர்மேந்திரப் பிரதான். மத்திய அரசின் கல்விக் கொள்கை அடிப்படையில்...
14. குரைக்கிற நாய் கடிக்காது குரைக்கிற நாய் கடிக்காது என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு. அதன் அர்த்தம் தொடர்ந்து பேசிக் கொண்டிருப்பவர்களின் செயல்கள்...
Add Comment