ஏழு ஆண்டுகளை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது, வாசிப்பை நேசிப்போம் ஃபேஸ்புக் குழு. சமூக வலைத்தளங்கள்தான் வாசிப்பு குறையக் காரணம் எனச் சொல்கிறோம். ஆனால், அந்தத் தளத்தை வைத்தே வாசிப்பை ஊக்குவிக்கும் குழுக்களும் அதே சமூக வலைத்தளங்களில் இயங்கி வருகின்றன. அப்படி பேஸ்புக்கில் இருக்கும் ஒரு குழுதான் ‘வாசிப்பை நேசிப்போம்.’ ஆரம்பித்த நான்கைந்து மாதங்களில் ஆர்ப்பாட்டம் செய்துவிட்டு பின்பு காணாமல் போகும் மற்ற குழுக்களைப் போல இல்லாமல், தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேர் இதில் இணைந்திருக்கின்றனர். வாசிப்பு மாரத்தான், குழு வாசிப்பு, முப்பது நாளில் முப்பது தலைப்புகள் எனப் போட்டி போட்டுக்கொண்டு வாசிக்கின்றனர். நாளொன்றுக்குச் சுமார் முப்பது புத்தக விமர்சனப் பதிவுகள் வருகின்றன. சிறந்த பதிவுகள், அதிகம் படித்தவர்கள், சொன்னபடி படித்து முடித்தவர்களுக்குப் பரிசுகள் தருகிறார்கள். வாசிப்புச் சுற்றுலா செல்கின்றனர். புத்தகக் கண்காட்சியில் வருடந்தோறும் சந்தித்துக் கொள்கின்றனர்.
இது எப்படிச் சாத்தியமானது? தொடங்கியதிலிருந்து தொய்வில்லாமல் முன்னேறிச் செல்ல எது வினையூக்கியாக இருந்து வருகிறது? இந்தப் பயணத்தில் நடந்த சுவாரசியமான சம்பவங்கள் என்னென்ன? வாசிப்பை நேசிப்போம் குழுவைத் தொடங்கிய இளைஞர், கதிரவன் ரத்னவேலிடம் பேசினோம்.
Add Comment