Home » அதிகார போதை; தவறான பாதை
உலகம்

அதிகார போதை; தவறான பாதை

அதிகாரம் ஒரு போதை. அதைத் தொடர்ந்து தக்கவைத்துக்கொள்ள என்ன வேண்டுமானாலும் செய்ய வைக்கும். இதனாலேயே கட்சிகள் தேர்தல் சமயத்தில் பல முறைகேடுகளைத் தலைவர்கள் பெயரில் நிகழ்த்துகின்றன.மக்களாட்சியில் தேர்தல் நடக்கும் போது சில வன்முறைகள் நடப்பது இப்போதெல்லாம் சகஜமாகி விட்டது. வரலாறு காணாத நிகழ்வாக அமெரிக்காவிலேயே, ஜனவரி ஆறாம் தேதி காபிடல் ஹில்லை தகர்க்க முன்னாள் அதிபர் திட்டமிட்ட செயல் உலகெங்கும் அதிர்வலைகளை எழுப்பின.உலகின் மிகப்பெரிய மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் காங்கிரசின் சொத்துக்கள் முடக்கப்பட்டு, சில எதிர்க்கட்சி தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டு, சரியான சமதளத்தில் அல்லாமல் தேர்தல்கள் நடத்தப்பட்டன. விளையாட்டரங்கில் விதிகள் மட்டும் அல்ல, அரங்கே சமதளம் இல்லை எனில் முடிவெப்படி சரியாக இருக்கும்?

வெனிசுலாவில் நெருப்பு பற்றி எரிகிறது. நிக்கோலஸ் மடுரோ (nicolás maduro) பதவியில் இருந்தவர். மறுபடியும் நடந்த தேர்தலில், தன் கட்சி பெரும்பான்மை வெற்றி பெற்றதாக அறிவித்திருக்கிறார். எதிர்க் கட்சியின் பெண் தலைவர் (Maria Corina Machado) மறைவிடத்திலிருந்து இதை எதிர்ப்பதோடு மட்டும் அல்ல, தன் கட்சி வெற்றி பெற்றதை நிரூபிக்கவும் முடியும். ஆனால் தான் வெளியே வந்தால் தன்னை கைது செய்துவிடுவார்கள் என அஞ்சுகிறார். எதிர்க் கட்சிகள் மடுரோவைவிட 39 இலட்சம் அதிக வாக்குகள் பெற்றதாகச் சொல்லுகின்றன. அமெரிக்கா, எதிர்க்கட்சித்தலைவரான எட்மண்டோ வெற்றிபெற்றதாக அங்கீகரித்திருக்கிறது, வாழ்த்துச் செய்தியும் அனுப்பியிருக்கிறது. அமெரிக்காவுடன் இன்னும் ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட இருபது நாடுகள் இணைந்து மடுராவின் வெற்றி அறிவிப்பைக் கண்டித்திருக்கின்றன.

எண்ணெய் வளம் நிறைந்த நாட்டில், இளைஞர்கள் போரிட வீதியில் குவிகிறார்கள். நாட்டில் மக்களுக்கு அதிகாரம் பெற்றுத்தந்தவர்களின் சிலைகளை உடைத்தெறிகிறார்கள். 8 மில்லியன் மக்கள் நாட்டைவிட்டு அகதிகளாக ஓடிப்போய்விட்டதாக ஐநா அறிவிக்கிறது. அவர்கள் அமெரிக்காவை நோக்கி வருகிறார்கள். அமெரிக்காவில் ஏற்கெனவே இமிக்ரேஷன் ஒரு தேர்தல் தலைவலியாக இருக்கும் நேரத்தில் 8 மில்லியன் மக்கள் புகலிடம் கேட்டு வந்தால் அமெரிக்கா என்ன செய்யும்? மடுரோவின் தேர்தல் செல்லாது என அறிவிக்கிறது அமெரிக்கா. தேர்தலில் நடந்த முறைகேடுகளை, தேர்தலுக்கு முன் எதிர்க்கட்சித்தலைவர்கள் சிறைபிடிக்கப்பட்டதைக் கண்டிக்கிறது. ஆனாலும் மடுரோ தன்னை தலைவராக மீண்டும் அறிவித்துக்கொள்கிறார்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!