இரண்டாயிரமாவது ஆண்டில் சென்னையில் ஒரு சிறிய கடையாகத் தொடங்கப்பட்டதுதான் நேச்சுரல்ஸ் அழகு நிலையம். இருபத்தியிரண்டு ஆண்டுகளில் இந்தியா முழுவதும் இருபது மாநிலங்களில் எழுநூறுக்கும் மேற்பட்ட கிளைகளைக் கொண்டு விரிந்திருக்கிறது. அழகு நிலையங்கள் மட்டுமில்லாமல், உடறபயிற்சி நிலையங்களும் செயல்பட்டுவருகின்றன.
‘பிரான்சைஸ்’ முறையின் மூலம் நாநூறுக்கும் அதிகமான பெண் தொழில் முனைவோர்களை இவர்களால் உருவாக்க முடிந்துள்ளது. இத்தனைக்கும் இந்த நிறுவனம் தொடங்கப்பட்டபோது அழகு நிலையங்கள் அத்தனை பிரபலமில்லை. இன்றைக்கு இருப்பதைப் போல ஒரு துறையாக அங்கீகரிக்கப்பட்டிருக்கவில்லை. சிறியளவில் அக்கம்பக்கத்து பெண்களுக்காக வைத்துச் செய்யக் கூடியதாகத் தான் இருந்தது.
நேச்சுரல்ஸின் நிறுவனர் வீணா மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி சி.கே.குமாரவேல் இருவரும் சவால்களைக் கடந்து வென்ற கதையை நம்மிடம் பகிர்ந்து கொண்டனர்.
Add Comment