இந்தியாவிலேயே முதல் முறையாக மகளிருக்கென மாநில அளவில் கொள்கைகளை வகுக்கத் தமிழ்நாட்டு அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
பெண்களுக்கு அதிகாரமளிக்கும் இந்த மாநில மகளிர் கொள்கைக்கான அறிவிப்பு கடந்த 2021-ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கான வரைவுக் கொள்கையை 2021 டிசம்பரில் வெளியிட்டு கருத்துக் கேட்டது தமிழ்நாடு அரசு. அதனுடைய இறுதி வடிவம் தான் இப்போது அமைச்சரவையின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.
இந்த மகளிர் கொள்கையானது பெண்களுக்குச் சம வாய்ப்பு, சம உரிமை, பொருளாதார மேம்பாடு, திறன் மேம்பாடு, பாதுகாப்பாக வாழ்வதற்கான உரிமை, கண்ணியம் காத்தல் போன்றவற்றை உறுதி செய்யும். சமூகத்தில் பெண்கள் மேலான வாய்ப்பு பெறவும், அரசியலில் வாய்ப்புப் பெறவும் அவர்களைத் தயார் செய்யவும், ஒட்டுமொத்த வளர்ச்சியை ஊக்கப்படுத்திக் கண்காணிக்கும் வகையில் இந்தக் கொள்கைகள் வகுக்கப்பட்டுள்ளன எனத் தமிழக அரசு தெரிவித்திருக்கிறது.
Add Comment