பெற்றோரைத் தவிர பிற அனைத்தையும் வாங்க முடிகிற துபாய் மால்களில் ஒன்றில் எனக்கான செருப்புக் கடை ஒன்றைக் கண்டுபிடித்து வைத்திருந்தேன். எல்லா மால்களிலும் செருப்புக் கடைகள் உண்டு, விதவிதமான செருப்புகள் கிடைக்கும் என்றாலும்கூட, துபாய் மாலில்தான் புது வரவுகள் இருக்கும். அழகான செருப்பு என்பதைவிட, என் காலுக்குச் சுகமான செருப்புக் கிடைக்கும் என்பதால்தான் இந்தச் செருப்புக் கடைக் கண்டுபிடிப்பு.
மகள்கள் பள்ளிக்கும், கணவர் வேலைக்கும் சென்றுவிட்ட ஓர் நாளில், வேலை எதுவுமின்றி சலிப்புத்தட்டிக் கிடந்தவோர் பொழுதில்தான் புதுச்செருப்பு வாங்குகிற எண்ணம் அபரிமிதமாக எழுந்தது. உடனே காரை எடுத்துக் கொண்டு கிளம்பி விட்டேன். அதிசயமாக, சாலைகள் போக்குவரத்து நெரிசலற்று இருந்தன அன்று. துபாயில் இப்படிக் காலியான சாலையில் பயணிப்பது ஓர் வரம். எப்போதேனும் கிடைக்கும் குறிஞ்சிப்பூ வாய்ப்பு.
Add Comment