எதுவும் ஆர்டர் செய்யவில்லை. திடீரென்று வீட்டிற்கு பெட்டி பெட்டியாய்ப் பொருட்கள் வந்திறங்க, அதிர்ந்து போயினர் அந்த நியூஜெர்சி வாழ் தம்பதியினர். ஆனால் செல்பேசியில் ஆன்லைன் ஆர்டர் செய்யப்பட்டிருந்தது. நீதான் வாங்கியிருப்பே என்று இருவரும் வாக்குவாதம் செய்தனர். இதன் இறுதியில் அந்தப் பொருட்களை ஆர்டர் செய்தது அவர்களது சிறு குழந்தை என்று தெரியவந்தது. அக்குழந்தை அம்மாவின் செல்ஃபோனை எடுத்து விளையாடியிருக்கிறது. அமேசான், ஆப்பில் போய் ஒரு க்ளிக் செய்துள்ளது. அதில் கடன் அட்டை, முகவரி பக்காவாக இருந்திருக்கிறது. எப்போதோ பட்டியலிட்டு வைத்திருந்த பொருட்கள் விவரமும் இருந்துள்ளது. பிறகு என்ன? அப்பொருட்கள் எல்லாம் வீடு தேடி வந்து விட்டன. பொருட்களின் மதிப்பு சுமார் இரண்டாயிரம் டாலர். ரூபாய் மதிப்பில் ரூபாய் ஒன்றரை லட்சம்.
ஆன்லைனில் பொருட்கள் வாங்குவதுதான் எத்தனை எளிது!
Add Comment