Home » ஆதீனங்களின் கதை
வரலாறு முக்கியம்

ஆதீனங்களின் கதை

பட்டினப் பிரவேசம்

சமீபத்தில் தருமபுரம் ஆதீன பட்டினப் பிரவேச நிகழ்ச்சி சர்ச்சைக்கு உள்ளானது. பிறகு சலசலப்புகள் அடங்கி நிலைமை சீரானது. அரசியல் உள்நுழைந்தால் உண்டாகும் இயல்பான பரபரப்புதான் அது. பாதகமில்லை. ஆனால் ஆதீனங்களும் மடங்களும் எப்போதாவது இப்படி சர்ச்சைக்கு உட்படும்போது மட்டும்தான் பொது மக்கள் கவனத்துக்கு வருகின்றன. இன்றைக்கு தருமபுரம். அன்றைக்கு மதுரை ஆதீனம். அதற்கு முன்னால் காஞ்சி சங்கர மடம். இதனால் என்ன சிக்கல் என்றால், இத்தகைய ஆன்மிக அமைப்புகள் விவகாரமானவை மட்டுமே என்கிற பொதுப் பிம்பம் எளிதில் கட்டமைக்கப்பட்டுவிடுகிறது.

உண்மை அதுதானா?

தமிழகத்தில் பக்தி இயக்கம் தழைக்கவும், தமிழின் பெருமைகளைப் பாரறியச் செய்யவும் ஆதீனங்களும் மடங்களும் பெரும் பணி ஆற்றியிருக்கின்றன. அதையும் சிறிது நினைவுகூர்ந்தால் தவறில்லை.

மடம் என்றால் என்ன?

மடம் என்பது முனிவர்கள், ஆசாரியர்கள், நைட்டிக பிரம்மச்சாரிகள் வாழும் இடம் என்கிறது தமிழ்க் கலைக்களஞ்சியம். ஆன்மிகப் பயணங்கள் செய்வோர் தங்கிச் செல்லும் இடங்களுக்கும் மடம் என்றே பெயர். ஆதீனம் என்ற சொல்லுக்கு உரிமை என்ற பொருளும் உண்டு. மடங்களின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களை ஆதீனம், மடாதிபதி என்ற சொற்களால் அழைக்கிறார்கள். சேக்கிழார் எழுதிய பெரிய புராணம் சுமார் ஐம்பது இடங்களில் மடம் என்ற சொல்லுடன் ‘திரு’ என்ற பதத்தையும் சேர்த்து, திரு மடம் என்று குறிப்பிடுகிறது. இரண்டு இடங்களில் பொது மடம் என்று சொல்கிறது. ஆதீன மடங்கள் சமயம் சார்ந்த ஆழ்ந்த பயிற்சி, சிந்தனை போன்றவற்றிற்கான களமாக இயங்கியிருக்கின்றன. வழிப் போக்கர்கள், தல யாத்திரை செய்யும் ஆன்மிக அன்பர்களுக்குத் தங்குமிடம், உணவளிக்கும் சத்திரம் நடத்துதல் போன்ற நடவடிக்கைகளிலும் மடங்கள் உதவியிருக்கின்றன.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



உங்கள் எண்ணம்

  • Deepanthirumaran Ramadoss says:

    அருமையான வரலாற்று தொகுப்பு, மதம் தாண்டிய ஆதினங்களின் சமூக பங்களிப்பு ஆச்சரியமூட்டுகிறது.

  • Ramesh Perumal says:

    ரொம்ப நாள் கழிச்சி படிக்கிற பாசிடிவ் கட்டுரை. ஆதினங்களின் மீது மரியாதை கூடுகிறது. குன்றக்குடி அடிகளார் ஈர்க்கிறார். Interest personality. அவுரங்க சீப் தகவல் புதிது. நன்றி.

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!