“என் சிறு இதயம் ஒரு மில்லியன் துண்டுகளாக உடைந்து விட்டது”
எனப் பின்னூட்டமிட்டிருந்தார் ஒரு பெண். இதயத்தில் அவ்வளவு வலி தரக்கூடியது அந்த வீடியோ. வகுப்பறையொன்றில் முக்காடணிந்த பெண்கள் சுமார் முப்பது பேர். ‘ஓ’ வென்று வித்தியாசமான ராகத்தில் மேசைகளில் முகம் புதைத்து அழுகிறார்கள். தலை முதல் கால் வரை ‘வெறி’ அணிந்த முல்லாக்கள் வகுப்பறைக்குள் துப்பாக்கிகளுடன் வலம் வருகிறார்கள். வருடம் 2021. இடம் ஆப்கானிஸ்தான்! ஆமாம், இந்தத் தாலிபான்கள், பெண்கள் படிப்பதைக் கண்டு ஏன் இவ்வளவு அஞ்சுகிறார்கள்? எது எப்படியோ, அன்று முதல் ஆப்கானியப் பெண்கள் எவரும் பள்ளிக் கூடப் பக்கமே வரக்கூடாதென்ற இழிவான சட்டம் வெற்றிகரமாக அமலுக்கு வந்தது.
பள்ளிக்கூடங்களுடன், மருத்துவக் கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள் என்ற எந்தப் பேதமும் இன்றி, எல்லா இடங்களினதும் கதவுகள் பெண்ணினத்திற்கு நேரே இழுத்துச் சாத்தப்பட்டன. உயர் கல்வியில் முதலாம் வருடம் பயின்றவர்கள், இறுதி வருடத்தின் இறுதித் தறுவாயை எட்டியவர்கள் எல்லோருமே மீண்டும் ஆரம்பக் கோட்டுக்குப் பின்னே வந்து நின்றார்கள். எல்லாமே பூச்சியத்தால் பெருக்கப்பட்டு விடுமோ என்று பயப்படும் அந்த வேதனை இருக்கிறதே!
மிக அருமையான கட்டுரை. 2.5 மில்லியன் பெண்கள் என்ற எண்ணிக்கை அதிர்ச்சியளிக்கிறது. இதயம் கனக்கிறது. ஆப்கானிஸ்தான் பெண்களுக்கு இறைவன் கருணை புரியட்டும்.
லிண்டா அறக்கட்டளையின் உழைப்பு வியக்க வைக்கிறது. 80000 அமெரிக்க டாலர்கள் என்பது பெரும் தொகை.
நல்லார் ஒருவர் உளரேல், அவர்பொருட்டு எல்லோருக்கும் பெய்யும் மழை.