ஆப்கனிஸ்தான், மீண்டும் உலகின் முக்கியப் பேசுபொருளாகிக் கொண்டிருக்கிறது. என்ன பெரிய புது விஷயம்? அதே தாலிபன், அதே ஐ.எஸ்.கேதானே என்று தோன்றலாம். இல்லை. இது இன்னும் வீரிய விவகார வினோத ரச மஞ்சரி.
நிரந்தரத் தீவிரவாதிகளும் திடீர் ஆட்சியாளர்களுமான தாலிபன் பதவிக்கு வந்தது முதல் தமது முதல் மற்றும் ஒரே எதிரியான ஐ.எஸ்ஸை ஒழித்துக்கட்டாமல் ஓயப் போவதில்லை என்று சொன்னார்கள். ஏற்கெனவே அமெரிக்கப் படைகள் அங்கே இருந்தபோது கிட்டத்தட்ட ஐ.எஸ் கூடாரங்கள் அனைத்தையும் காலி செய்திருந்தார்கள். மிச்சமிருந்தவர்களை இவர்கள் ஒரு ஓரமாக ஒதுக்கித் தள்ளி வைக்க, கிழக்கு ஆப்கனிஸ்தானில் ஒரு சில இடங்களில் மட்டும்தான் இப்போது ஐ.எஸ் என்பது உண்மையே.
ஆனால் கடந்த மார்ச் மாதம் வரை வாலையும் இன்ன பிறவற்றையும் சுருட்டி வைத்துக்கொண்டிருந்த ஐ.எஸ் இப்போது திரும்பவும் வெளியே வர ஆரம்பித்திருப்பதும் பரவலாக நாச வேலைகள் நடக்கத் தொடங்கியிருப்பதும் அக்கம்பக்கத்து நாடுகளின் உளவு அமைப்புகளின் உறக்கம் கலைத்திருக்கிறது.
கருத்தை உள்வாங்குவதா உவமைகளுக்கு சிரிப்பதா? உ:கர்சீப்,யூட்யூப் ஜோதிடர்கள்!
அருமை!
விஸ்வநாதன்