சமீபத்தில் ஒரு காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகியது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே உள்ள பூங்காவில் இளம்பெண் ஒருவர் கண்ணீருடன் அமர்ந்திருக்கிறார். பூங்கா காவலர் அவருக்கு ஆறுதல் சொல்கிறார். தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிபுரியும் அந்தப் பெண்ணின் கவலைக்குக் காரணம், செயற்கை நுண்ணறிவு (AI). ஏஐ காரணமாகத் தன் பணியும் எதிர்காலமும் என்னவாகுமோ என்ற அச்சம்.
இந்த அச்சம் ஏன் ஏற்படுகிறது? ஏஐ மற்றும் அதனால் ஏற்படக்கூடிய வேலையிழப்பு சார்ந்த செய்திகள் தொடர்ந்து வந்துகொண்டிருக்கின்றன. இதற்கு ஒரு மறுபக்கம் இருக்கிறது. ஏஐ வேலையிழப்புச் செய்திகளில் நுட்பமாகச் சில உண்மைகள் தவிர்க்கப்படுகின்றன. பரபரப்புக்காகச் சில ஊடகங்கள் இதைச் செய்கின்றன.
ஓர் உதாரணத்தைப் பார்க்கலாம். அமெரிக்கச் செய்தி இணையத்தளம் குவார்ட்ஸில் (Quartz) ஒரு கட்டுரை வருகிறது. அமேசான் நிறுவனத்தில் பதினாறாயிரம் பேர் பணிநீக்கம் செய்யப்பட்ட செய்தி. துணைத் தலைப்பில் அந்நிறுவனத்தின் தலைவர் ஏஐ பற்றிப் பேசியது. அவர் நேரடியாக அப்படிக் கூறாவிட்டாலும் கூட, பதினாறாயிரம் பேரின் வேலையை ஏஐ செய்து விடுகிறது என்ற எண்ணத்தை அக்கட்டுரையை வாசிப்பவர் மனதில் ஏற்படுத்துகிறது.















Add Comment