Home » AI பத்திரிகை ஆபீஸ்: ஏய் நீ ரொம்ப ஓவராத்தான் போற!
அறிவியல்-தொழில்நுட்பம்

AI பத்திரிகை ஆபீஸ்: ஏய் நீ ரொம்ப ஓவராத்தான் போற!

ரோமின் ஓர் இதமான காலை. எழுந்தவுடன் காபி குடித்துக்கொண்டு பத்திரிகையைப் புரட்டும் இத்தாலியர்களின் கைகளில் அன்று ஒரு பதிய சோதனை. இல் ஃபோக்லியோ (Il Foglio) பத்திரிகையின் ஏஐ பதிப்பு. முதல் முறையாக, செய்தி, தலைப்பு, விமர்சனம், என எல்லாமே செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்டது. ஆசிரியர் செராசாவின் வெற்றிக் குரலுடன். “இதை ‘செயற்கை’ என்று சொல்லாதீர்கள். இது மற்றொரு இல் ஃபோக்லியோ”

செய்தி வாசிக்கும் ஏஐ வந்து சில மாதங்கள் ஆகின்றன. தற்போது செய்தி எழுதும் ஏஐ வந்துள்ளது. “செய்தி எழுதும்” என்றால் ஒரே ஒரு செய்தியை மட்டும் எழுதுவது அல்ல. செய்தித்தாள் முழுவதும் ஏஐயின் கைவண்ணமே.

ஏஐ படம் வரைகிறது. இசையமைக்கிறது. பாட்டுப் பாடுகிறது. அவ்வரிசையில் பத்திரிகை எழுதுகிறது. அவ்வாறு எளிதாகக் கடந்து சென்று விடமுடியாது. இதில் பல்வேறு சவால்கள் நிறைந்துள்ளன.

தொழில்நுட்ப சவால்கள் ஒருபுறமிருக்கட்டும். காலை எழுந்தவுடன் நாம் கையில் எடுப்பது செய்தித்தாள். “நோ… நானெல்லாம் ஃபோனத்தான் பாப்பேன்” என்றால் காட் பிளஸ் யூ. அவ்வாறு நாம் அனுதினமும் வாசிக்கும் ஒன்றை ஏஐ எழுதுவது உங்களுக்குச் சம்மதமா? அப்பத்திரிகையை தொடர்ந்து வாங்குவீர்களா? பதிலை கமெண்ட்டில் சொல்லத் தேவையில்லை. உங்களுக்கு நீங்களே மௌனமாகச் சொல்லிக்கொள்ளுங்கள்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!