தங்கப்பதக்கத்தின் மேலே…
இது ஒலிம்பிக் காலம். இந்தாண்டு ஒலிம்பிக் போட்டிகள் பாரிஸ் நகரில். வழக்கம் போல நகரெங்கும் விழாக்கோலம். இருநூறுக்கும் மேற்பட்ட நாடுகள். பத்தாயிரத்திற்கும் அதிகமான வீரர்கள். விதவிதமான போட்டிகள். உலகின் முதன்மையான விளையாட்டுத் திருவிழா ஒலிம்பிக்.
தொழில்நுட்பக் கண்கொண்டு பார்த்தால் இவையனைத்துமே தகவல் சுரங்கங்கள். தகவல் என்று வந்துவிட்டால் ஏ.ஐ இல்லாமல் எப்படி? நிகழும் ஒலிம்பிக் போட்டிகளில் ஏ.ஐ பல்வேறு ஜாலங்கள் செய்யக் காத்திருக்கிறது.
ஏ.ஐ தான் என்றில்லை. எந்தவொரு தொழில்நுட்பத்தையும் தன்வயப்படுத்திக் கொள்வதில் விளையாட்டுத்துறை என்றுமே முன்னணியில். விளையாட்டுகள் நடப்பது முதல் ஒலிபரப்புவது வரை எங்கெங்கும் தொழில்நுட்பத்தின் ஆதிக்கம் தான். இப்போதைய “கட்டிங் எட்ஜ்” நுட்பம் ஏ.ஐ தான். எனவே இதைக் கொண்டு நிகழ்வை எவ்வாறு மெருகேற்றலாம் என்று திட்டமிட்டிருக்கிறது சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி. இதற்கென “ஒலிம்பிக் ஏ.ஐ அஜெண்டா” என்ற ஒன்றை வரையறுத்திருக்கின்றனர்.
Add Comment