ஏ.ஐயும் விக்கெட் கீப்பரும் ஒன்னு
எண்ணற்ற ஏ.ஐ கருவிகள் வந்துவிட்டன. நாள்தோறும் பல புதிய கருவிகள் வந்த வண்ணம் உள்ளன. பார்த்தவுடன், “ஆ.. சூப்பர்…” என்று சில கருவிகள் வியக்கவைக்கின்றன. ஆனால் பயன்படுத்தத் தொடங்கிய பின்னர், “நான் நெனச்ச மாதிரி இல்லயே…” என்று ஏமாற்றமளிக்கின்றன.
இச்சூழலை எவ்வாறு கையாள்வது? என்னவெல்லாம் செய்தால் நமது நேர விரயத்தைத் தவிர்க்கலாம்? சரியான தளபதிகளை அடையாளம் காண நம்பத்தகுந்த வழிமுறைகள் எவையேனும் இருக்கின்றனவா?
முதலில் “ஷைனி ஆப்ஜெக்ட் சிண்ட்ரோம்” (Shiny Object Syndrome) என்ற ஒன்றைப் பற்றித் தெரிந்துகொள்வோம். மாறிக்கொண்டே இருக்கும் துறைகளில் ஆர்வமுடன் இருப்போர் சந்திக்கும் பிரச்னை இது. எந்தவொன்று புதிதாக வந்தாலும் அதன் மேல் அதீத ஆர்வம் செலுத்துவது. செய்துகொண்டிருக்கும் பணிகளையெல்லாம் விட்டுவிட்டு இப்புதிய கருவியுடன் தொடர்ந்து நேரம் செலவிடுவது.
Add Comment