Home » AIM IT – 29
aim தொடரும்

AIM IT – 29

அண்ணனுக்கு ஒரு ஊத்தாப்பம்…

ஏஐ கலவரப்படுத்தியிருக்கும் துறைகளில் ஒன்று கோடிங். “இனிமே கோடிங் கத்துக்கிறது வேஸ்ட்டா…?” என்றெல்லாம் கேட்கத் தொடங்கியிருக்கிறார்கள். காரணம் எல்.எல்.எம்கள். இப்போதெல்லாம் க்ளாட், சாட்ஜிபிடி போன்ற மொழி மாதிரிகளே ப்ரோக்ராமும் எழுதிவிடுகின்றன.

என்ன செய்ய வேண்டும் என்று சொன்னால் போதும். கடகடவெனக் “கோட்” (Code) அடித்துக் கொடுத்துவிடுகிறது ஏ.ஐ. ப்ரோக்ராம் எழுதும் பயிற்சியைக் கல்லூரிகளில் செமஸ்டர் வாரியாக மாங்கு மாங்கென்று சொல்லிக் கொடுக்கின்றனர். அதை ஏ.ஐ இப்போது அசால்ட்டாகச் செய்யத் தொடங்கியிருக்கிறது.

“ஹலோ வேர்ல்ட்…” என்று ப்ரிண்ட் செய்யும் ப்ரோக்ராம் தான் பாலபாடம். இதில் தொடங்கி சிக்கலான செயல்பாடுகளைக் கையாள்வது வரை ப்ரோக்ராம் எழுதக் கற்கின்றனர். இது போக மொழிப்பிரச்சினை வேறு உள்ளது. எண்ணற்ற நிரல் மொழிகள் (ப்ரோகிராமிங் லாங்குவேஜ்) இருக்கின்றன. ஒவ்வொரு மொழிக்கும் வெவ்வேறு சின்டாக்ஸ். சின்டாக்ஸ் என்பதை இலக்கணம் என்று புரிந்துகொள்ளலாம்.

ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு மொழி பொலிவடையும். உடனே அதை நோக்கிக் கூட்டம் படையெடுக்கும். பின்னர் காலங்கள் மாறும். காட்சிகளும். வேறொரு மொழி வரும். இப்படிக் காலமெல்லாம் நிரல் மொழிகளின் பின்னால் காவடியெடுக்கவேண்டும்.

சி, சி++, விஷுவல் பேசிக், ஜாவா, பைத்தான், ஜூலியா என்றொரு நீண்ட பட்டியல் உள்ளது. நிரல் மொழிகளைப் பொறுத்தவரை நிரந்தர சூப்பர் ஸ்டார் என்று எவரும் கிடையாது. “இந்தக் குதிரை வேகமா ஓடுமா? ஜெயிக்குமா…?” இவ்வளவு தான் நோக்கம்.

தற்போது ஏ.ஐயால் அனைத்து மொழிகளிலும் கோட் எழுத முடிகிறது. அப்படியென்றால் இனி மனிதர்கள் கோடிங் கற்கத்தேவையில்லை தானே? நிச்சயம் கற்க வேண்டும். அதற்கான நிராகரிக்க இயலாத காரணங்கள் உள்ளன. ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!