நெஞ்சம் மறப்பதில்லை
‘கோபைலட்’ இதுதான் இந்த வாரம் ஏ.ஐ. வட்டாரங்களில் அதிகம் உச்சரிக்கப்பட்ட சொல். காரணம் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் ‘பில்ட்’ (Build) என்னும் நிகழ்வு. கூகுளின் ஐ.ஓ போலவே இதுவும் மிகவும் பிரசித்தி பெற்ற ஒன்று. இந்த ஆண்டிற்கான பில்ட் நிகழ்வில் மைக்ரோசாஃப்ட் வெளியிட்டுள்ள ஏ.ஐ. அறிவிப்புகள் ஏராளம்.
இந்த அறிவிப்புகளின் மையமாக விளங்குவது கோபைலட். “இதான் ஏற்கனவே இருக்கே…” என்றால், புத்தம் புதிய வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டுள்ளது கோபைலட். அத்துடன் கோபைலட் பெர்சனல் கம்ப்யூட்டர் (Copoilet PC) என்று பெயரிடப்பட்டுள்ள புதிய வகை லேப்டாப் மற்றும் டேப்ளட்களை அறிமுகப்படுத்தியுள்ளனர்.
கம்ப்யூட்டரின் தலைமைச் செயலகம் சி.பி.யூ. இதற்குத் துணை செய்ய வந்தவை தான் ஜி.பி.யூக்கள். இப்போது இதுவும் போதாதென்று என்.பி.யூ என்று ஒன்றைச் சேர்த்துள்ளனர். என்.பி.யூ என்றால் நியூரல் ப்ராசஸிங் யூனிட். ஏ.ஐ சாப்ட்வேர்கள் தங்குதடையின்றி இயங்க இந்த என்.பி.யூக்கள் உதவுகின்றன.
Add Comment