ரமலான் மாதம் ஆரம்பித்தவுடன், இரவுச் சிறப்புத் தொழுகைக்குப் பள்ளிவாசல் நோக்கி சாரை சாரையாக இஸ்லாமியர்கள் செல்கிறார்கள். ஐந்து வேளைத் தொழுகையோடு இந்தச் சிறப்புத் தொழுகையான ‘தராவீஹ்’ ரமலான் மாதம் முழுக்க இரவுகளில் அனைத்து மசூதிகளிலும் நடக்கும். ஆனால் பாலஸ்தீனத்தில் இருக்கும் அல்-அக்ஸா மசூதியில்?
வெறும் மசூதி என்று கடந்துவிட இயலாது அல்-அக்ஸாவை. இஸ்லாமியர்களுக்கு மெக்கா, மதீனாவை அடுத்து அல்-அக்ஸா மசூதி மூன்றாவது புனித ஸ்தலம். முஹம்மது நபியின் வரலாற்றுடன் நேரடித் தொடர்புடையது. ஜிப்ரீல் என்னும் வானவர் அவரை மெக்காவிலிருந்து ஜெருசலேத்துக்கு அழைத்துச் சென்று இறக்கிய குன்று உள்ள பிராந்தியம் அது. இத்தனைச் சிறப்பு வாய்ந்த மசூதியில் தொழ வேண்டும் என்றால் உயிரைப் பணயம் வைக்க வேண்டும். அதற்கும் மக்கள் தயாராகத் தான் இருக்கிறார்கள்.
முதல் நாள் தராவீஹ் தொழுகை செய்ய மக்கள் அல்-அக்ஸா நோக்கி வழக்கம் போல் செல்ல ஆரம்பித்தார்கள். இஸ்ரேலிய இராணுவம் வழக்கமான கெடுபிடியைவிட முரட்டுத்தனமான சட்டங்களோடு இந்த முறை களம் இறங்கியது. தொழுகைக்கு வந்தவர்களைவிட நூற்றுக்கணக்கான இராணுவத்தினர் குவிக்கப்பட்டு இருந்தனர். மசூதி நோக்கி வந்த பலரை உள்ளே விடாமல் விரட்டி அடித்தார்கள்.
Add Comment