தென்கிழக்கு ஐரோப்பாவின் பால்கன் தீபகற்பத்திலுள்ள ஒரு சிறிய நாடு அல்பேனியா. கடந்த செப்டம்பர் 11ஆம் தேதி உலகில் முதன்முறையாக ஒரு செயற்கை நுண்ணறிவு அமைச்சரை நியமித்த நாடாக அல்பேனியா சர்வதேசத் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்தது.
அல்பேனியாவில் மே பதினொன்றாம் தேதி நடைபெற்ற பொதுத் தேர்தலில், எடி ராமாவின் சமூக உடைமைக் கட்சி 140 இடங்களில் 83 இடங்களை வென்றது. எடி ராமா நான்காவது முறையாக அல்பேனியப் பிரதமராகப் பதவியேற்றார். அந்தக் கூட்டத்தில் எடி ராமா உலகின் முதல் செயற்கை நுண்ணறிவு நிரலான டியெல்லாவை அமைச்சரவை உறுப்பினராக அதிகாரப்பூர்வமாக நியமித்தார்.
டியெல்லா என்பதற்கு அல்பேனிய மொழியில் சூரியன் என்று பொருள். கம்ப்யூட்டர் டிஜிட்டல் குறியீடுகளால் பட வடிவில் உருவாக்கப்பட்ட மெய்நிகர் உருவமே டியெல்லா. டியெல்லாவை அல்பேனியாவின் தேசியத் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் (National Agency for Information Society), மைக்ரோசாஃப்ட் நிறுவனம் ஆகியவை இணைந்து வடிவமைத்துள்ளன.















Add Comment