Home » அதிகார நந்தி – 29
அதிகார நந்தி நாள்தோறும்

அதிகார நந்தி – 29

நான்கு வழக்குகள்

அமெரிக்க அரசியலில் பூகம்பம் ஒன்று நடந்தது. உலக வல்லரசின் வரலாற்றில் முதன்முறையாக ஒரு அமெரிக்க அதிபர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். இது வெறும் ஓர் அரசியல் செய்தியல்ல – இது அமெரிக்க ஜனநாயகத்தின் அடித்தளங்களை உலுக்கும் ஒரு வரலாற்று நிகழ்வு.

நியூயார்க் நகரின் ஒரு நீதிமன்றத்தில், 34 குற்றச்சாட்டுகளிலும் டிரம்ப் குற்றவாளி என அறிவிக்கப்பட்டபோது அந்த நீதிமன்றத்தில் ஒரு ரோஜா இதழ் விழுந்திருந்தாலும் கேட்டிருக்கும் அளவுக்கு அமைதி நிலவியது. ஆனால் இந்த அமைதியின் பின்னால் மறைந்திருந்தது அமெரிக்காவின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் புயல்.

இந்த வழக்கின் மையம் ஸ்ட்ராமி டேனியல்ஸ் என்ற ஆபாசப்பட நட்சத்திரத்துடன் டிரம்ப் கொண்ட தகாத உறவும், அதை மறைக்க அவர் செய்த முயற்சிகளும்தான். 2016 தேர்தலுக்கு முன்பு, இந்த விவகாரம் வெளியாகாமல் இருக்க டிரம்ப் தனது வழக்கறிஞர் மைக்கேல் கோஹன் மூலம் ஸ்ட்ராமி டேனியல்ஸுக்கு $130,000 அளித்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டது.

இது வெறும் பாலியல் விவகாரம் அல்ல. அமெரிக்க வாக்காளர்களை ஏமாற்றும் ஒரு சதித்திட்டம். உண்மையை மறைத்து, பொய்களின் அடிப்படையில் ஆட்சியைப் பிடிப்பது நம்பிக்கைத் துரோகம் என்பதுதான் இந்த வழக்கின் அடிப்படை.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!