கனவுகளின் தேசத்தில் கலவரம்
கனவுகளின் தேசம் இன்று பெரும் குழப்பத்தில் உள்ளது. ஒருபுறம் எல்லையில் குவியும் புலம்பெயர்ந்தோர். மறுபுறம் பல்கலைக்கழகங்களில் கொதிக்கும் மாணவர் போராட்டங்கள். இரண்டும் அமெரிக்க அரசியலை உலுக்கி எடுத்துள்ளன.
பாதுகாப்புத் தேடி அயல்நாட்டிலிருந்து இரண்டு பேர் வந்தால் பரவாயில்லை. இரண்டாயிரம் பேர் வந்தால்? அமெரிக்காவின் நிலைமை இதுதான்.
மின்சாரம் பாய்ச்சிய கடினமான கம்பிவேலிகளுக்குள் புகுந்து வருடம் முழுதும் மக்கள் வந்துகொண்டே இருக்கிறார்கள். மெக்சிகர்கள் மட்டும் இல்லை. கடந்த வருடம் அதிகம் வந்தது சீனர்களும் இந்தியர்களும்தான். 30 நிமிடத்துக்கு ஒரு பேருந்து. தாய்லாந்து, பனாமா, ஈக்வேடார், நிகாரகுவா, மெக்சிகோ வழியாக 40 நாள் பயணம். $14,000 செலவு செய்து கலிஃபோர்னியா வழியாக அமெரிக்காவுக்குள் நுழைகிறார்கள்.
‘சீனாவில் வாழ்வதே கடினம்’ என்று சொல்லும் சீனர்களில் மாணவர்கள், குழந்தைகள், பெண்கள், ஆண்கள், நடுத்தர வயதினர் என அனைவரும் உள்ளனர். ‘சுதந்தரம் வேண்டும்’ என்பதையே முக்கியக் காரணமாகக் கூறுகிறார்கள்.
TikTokஇல் ‘எப்படி அமெரிக்காவிற்குள் வருவது’ என்பதற்கான வழிமுறைகள் உள்ளன. ‘எப்படிக் கடத்தல்காரர்களைத் தொடர்புகொள்வது’ என்பது’ வரை மாண்டரின் மொழியில் விளக்கப்பட்டுள்ளது.















Add Comment